LPG டெலிவரி பெயரில் புதிய ஸ்கேம்.. DAC/OTP பகிர வேண்டாம்.. இண்டேன், HP, பாரத் கேஸ் எச்சரிக்கை..!

lpg scam

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை குறிவைத்து புதிய வகை சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதாக இண்டேன், ஹெச்பி கேஸ் மற்றும் பாரத் கேஸ் நிறுவனங்கள் நுகர்வோருக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக டெலிவரி அங்கீகாரக் குறியீடு (Delivery Authentication Code – DAC) அல்லது OTP எண்ணை தொலைபேசியில் யாரிடமும் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சமீப காலமாக மோசடிக்காரர்கள் எரிவாயு ஏஜென்சி அதிகாரிகள் போல நடித்து, அதிகாரப்பூர்வ தகவல் போல தோன்றும் SMS மற்றும் வாட்ஸ் அப் செய்திகளை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. அதில், “சிலிண்டர் டெலிவரியை உறுதிப்படுத்த DAC/OTP அவசியம்” என தெரிவித்து, பின்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு குறியீட்டை கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“DAC பகிரவில்லை என்றால் சிலிண்டர் ரத்து செய்யப்படும்” என்று கூறி நுகர்வோரை ஏமாற்றும் இந்த மோசடியில், குறியீட்டை பெற்றவுடன் வாடிக்கையாளர்களின் கணக்குகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட நிதிச் செயலிகளை மோசடிக்காரர்கள் அணுகி பணம் திருடுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, DAC குறியீட்டை சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர் வீட்டின் வாசலில் நேரில் வந்தபோது மட்டுமே பகிர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. HP மற்றும் பாரத் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு 4 இலக்க DAC-வும், இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு 6 இலக்க DAC-வும் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் பொதுவாக “VM-HPGAS”, “VK-INDANE”, “AD-BPCL” போன்ற சரிபார்க்கப்பட்ட அடையாளங்களிலிருந்து மட்டுமே வரும் என்றும், தனிப்பட்ட மொபைல் எண்களில் இருந்து வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் பாதுகாப்பிற்காக IndianOil One, Hello BPCL மற்றும் HP Pay போன்ற அதிகாரப்பூர்வ செயலிகள் மூலம் மட்டுமே சிலிண்டர் முன்பதிவு செய்யுமாறும் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

Read more: முட்டை வேகவைத்த தண்ணீரை வீணாக கொட்டுறீங்களா..?  இது தெரிஞ்சா இனிமேல் பண்ணமாட்டீங்க!

English Summary

New scam in the name of cylinder delivery.. Do not share DAC/OTP.. Intane, HP, Bharat Gas warning..!

Next Post

தமிழக அரசியல் புதிய சகாப்தம்.. உதயநிதி vs விஜய் என மாறும் களம்..!

Mon May 11 , 2026
தமிழகத்தின் அரசியல் களம் ஒரு தலைமுறை மாற்றத்திற்குத் தயாராகி வருகிறது. திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்து, முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதலமைச்சராகி உள்ளார் விஜய்.. உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.. முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் இடையிலான ஒரு முக்கிய அரசியல் மோதலைச் சந்திக்க சட்டமன்றம் காத்திருக்கிறது. திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.. இதன் […]
vijay udhyanidhi

You May Like