சூப்பர் அப்டேட் தந்த மெட்டா, எப்படி தெரியுமா ??

மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. ஆனாலும்,  வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.


அந்த வரிசையில், தற்போது விண்டோஸ்-கான புதிய வாட்ஸ்-அப் செயலி மூலம் ஒரே நேரத்தில் 32 பேருடன் வீடியோ கால் மேற்கொள்ள முடியும். ஏற்கனவே 8 பேருடன் வீடியோ கால் பேசும் வசதி இருந்த நிலையில், தற்போது மெட்டா நிறுவனம்  அதனை விரிவுப்படுத்தி 32 பேருடன் வீடியோ பேசும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோன்று, தற்போது 32 பேருடன் ஆடியோ காலையும் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸிற்கான டெஸ்க்டாப் வாட்ஸ்-அப் செயலி, மெட்டா நிறுவனத்தின் பிற பயன்பாடுகளைப் போன்றே அதாவது மொபைல் போன்கள், கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் உள்ளிட்ட பல சாதனங்களில் செய்தி அனுப்புதல், மீடியா மற்றும் அழைப்புகளுக்கு வழங்கப்பட்டதை போன்ற எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் அம்சத்தை பெற்றுள்ளது.

1newsnationuser1

Next Post

தனுஷ், சிம்பு, அமலாபால் உள்ளிட்ட 14 நடிகர்களுக்கு ரெட் கார்டு..? சம்பளம் வழங்குவதிலும் புதிய கட்டுப்பாடு..!!

Sat Jul 1 , 2023
நடிகர் தனுஷ் உள்ளிட்ட 14 நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் கேட்டுள்ளது. தேனாண்டாள் முரளி தலைமையிலான நிர்வாகத்தினர் சமீபத்தில் நடைபெற்ற பொது குழுவில் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். அதில், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய அல்லது முன் தொகை பெற்றுக் கொண்டு கால்ஷீட் வழங்காத நடிகர்கள் மீது ரெட் கார்டு விதிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, […]
Dhanush

You May Like