அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்த ஜாக்பாட்.. மார்ச் மாதத்தில் வெளியாக உள்ள 3 முக்கிய அறிவிப்புகள்..

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. தொழிலாளர் பணியகம் என்பது தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பிரிவாகும்.

தேநீர் விருந்து அழைப்பு..! அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய கடிதம்..!

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதனால் அகவிலைப்படி உயர்வு 38%ல் இருந்து அது 42 சதவீதமாக அதிகரிக்கும். இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும்.

இதனிடையே மார்ச் 8 ஆம் தேதி ஹோலிக்குப் பிறகு, மத்திய அரசு ஃபிட்மென்ட் காரணியை திருத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 18,000 ரூபாயில் இருந்து 26,000 ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊதிய உயர்வு..? மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி..!!

பொதுவான ஃபிட்மென்ட் காரணி தற்போது 2.57 சதவீதமாக உள்ளது. ஆனால் ஊழியர்கள் இப்போது ஃபிட்மென்ட் காரணியை 3.68 ஆக உயர்த்துமாறு அரசாங்கத்திடம் கோருகின்றனர். இந்த உயர்வின் மூலம் குறைந்தபட்ச ஊதியம் தற்போது ரூ.18,000லிருந்து ரூ.26,000 ஆக உயரும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதனாம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஃபிட்மெண்ட் காரணி உயர்வு என அடுத்தடுத்து நற்செய்திகள் வெளியாக உள்ளது..

மேலும் 18 மாத கால அகவிலைப்படி நிலுவை தொகை வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.. மார்ச் மாதத்தில் இதுகுறித்து அரசு முடிவு எடுக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்..

அதன்படி ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத கால நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து ஊழியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றும் பட்சத்தில், லெவல் 3 பிரிவில் உள்ள அரசு ஊழியர்கள் ரூ.11,880-37,554 வரை பெறலாம் என்றும், லெவல் 13/14 ஊழியர்கள் ரூ 1,44,200-2,15,900 பெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. எனவே அகவிலைப்படி உயர்வு, ஃபிட்மெண்ட் காரணி மற்றும் அகவிலைப்படி நிலுவை தொகை ஆகியவை குறித்து மத்திய அரசு விரைவில் நற்செய்திகளை அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Maha

Next Post

பெற்றோர்களே கவனம்...! குடற்புழு நீங்க அரசு வழங்கும் இலவச மாத்திரை...! யார் யார் இதை பெறலாம்...?

Tue Feb 14 , 2023
தருமபுரி மாவட்டத்தில்‌ இன்று தேசிய குடற்புழு நீக்க நாள்‌ தேசிய அளவில்‌ கடைப்பிடிக்கப்பட உள்ளது. 1-வயது முதல்‌ 19-வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்‌ அங்கன்வாடி மையங்கள்‌, அரசு பள்ளிகள்‌, அரசு உதவிப்பெறும்‌ பள்ளிகள்‌, தனியார்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகள்‌, பாலிடெக்னிக்‌ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும்‌ குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்‌) வழங்கப்படும்‌. தேசிய குடற்புழு நீக்க நாளில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்‌ 21-02-2023 செவ்வாய்கிழமை அன்று நடைபெறும்‌. அன்றைய தினத்தில்‌ […]

You May Like