தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 6 மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், வாக்குகளை சேகரிக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதிமுக தரப்பில் தொண்டர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது. தேர்தலில் ஒரு வாக்கில் தோல்வி அடைந்தாலும் தோல்வி, தோல்வி தான். ஆனால் அதிமுக தலைமையோ பிரிந்து சென்ற தலைவர்களை ஒருங்கிணைக்காமல் அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகள் நீக்கி வருகிறது.
இந்த நிலையில், அதிமுகவில் தொடர்ந்து நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர். ஓபிஎஸ் உள்ளிட்டோரை இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் கோரிக்கையை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, அவரையும் அவரை ஆதரித்த நிர்வாகிகளையும் நீக்கியுள்ளார். இந்த நிலையில் கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த, C. பாஸ்கர் (எ) N.C. பார்த்தசாரதி, திருப்போரூர் தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அதிமுகவில் இரந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில்; கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த, C. பாஸ்கர் (எ) N.C. பார்த்தசாரதி, திருப்போரூர் தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.