நீதா அம்பானியின் பிரமிக்கவைக்கும் சொகுசு கார்!! விலை என்ன தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியும், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரும்,  நிறுவனருமான நீதா அம்பானி புதிய வகை சொகுசு காரை வாங்கியுள்ளார். 

உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றான அம்பானி குடும்பம். தங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் செழிப்பான வணிக முயற்சிகள், ஆடம்பர கொண்டாட்டங்கள் ஆகியவை காரணமாக அவ்வப்போது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இப்போது முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி புதிய ரோல்ஸ் ராய்ஸ் பாண்தம் VIII EWB ஐ வாங்கியுள்ளார்.

இதை மிகவும் தனித்துவமான ரோஸ் குவார்ட்ஸ் வண்ணத்தில் அந்த கார் உள்ளது.  அதன் உட்புறம் ஆர்க்கிட் வெல்வெட் நிறத்தில் உள்ளது.  மற்ற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த நிறத்தைத் தேர்ந்தெடுத்தாலும்,  இந்தியாவில் இந்த வண்ணம் மிகவும் அரிதானது. இந்த காரை நீதா அம்பானி தனிப்பட்ட முறையில் கஸ்டமைஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதா அம்பானியின் புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.  இருப்பினும், தனிப்பயனாக்க விருப்பங்களைப் பொறுத்து, இந்தியாவில் இதன் விலை சராசரியாக ரூ. 12 கோடி ஆகும். கடந்த ஆண்டு தீபாவளியன்று அவரது கணவர் முகேஷ் அம்பானி அவருக்கு கருப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

Annamalai | "திமுகவினரால் தமிழ்நாட்டின் முட்டுச்சந்தை கூட காப்பாற்ற முடியாது"… அண்ணாமலை அதிரடி பதிவு.!

Wed Apr 10 , 2024
Annamalai: திராவிட முன்னேற்றக் கழகத்தால்(DMK) தமிழ்நாட்டின் முட்டுச்சந்தை கூட காப்பாற்ற முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கிறது. தேர்தல் வாக்குப்பதிவு நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன . தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் […]

You May Like