அப்ப இனித்தது.. இப்ப கசக்குதா.. இப்படி ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை.. இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்.. கொந்தளித்த இபிஎஸ்..

puthiyathalaimurai 2024 03 b36f000c 4144 4c99 8019 2d65ed6ad568 5

தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்..

தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர்.. தமிழக அரசு போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.. இதனால் தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர்.. எனினும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது..


இதையடுத்து காவல்துறையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.. இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் அறிவித்தனர்.. ஆனால் போராட்டம் தொடர்ந்ததால் நேற்று நள்ளிரவில் தூய்மை பணியாளர்களை கைது செய்தனர்.. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ வணக்கம் திரு. ஸ்டாலின் அவர்களே… ரிப்பன் மாளிகை வாசலில், நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி , கொரானவின் போது கூட நம் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களை அடித்து நொறுக்கி , அங்கிருந்து அகற்றி பல்வேறு இடங்களில் சிறை வைத்துள்ளனர் உங்கள் ஏவல்துறை.

யார் அவர்கள்? சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? இல்லையே. ஏழை எளிய மக்கள்! அன்றாடம் தூய்மைப் பணி செய்து, சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருந்தவர்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்கு நேர்மாறாக செயல்பட்டத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் அறவழியில் போராடியது ஒரு தவறா?

அவர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே… அப்போது மட்டும் இனித்தது? இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் கேட்கும் போது கசக்கிறதா? எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் இருந்தபோது எழுதிய கடிதங்களில் ,எந்த வழக்கு இருந்தாலும், இவர்கள் பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று நாடகமாடினேரே, நினைவில் இருக்கிறதா?

“நள்ளிரவில் அடாவடித்தனமாக , வலுக்கட்டயாமாக நம் அரசுக்கும் மக்களுக்கும் பணி புரியும் , நலிவடைந்த தூய்மை பணியாளர்கள் மீது 79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இது போன்ற ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை. தூய்மை பணியாளர்கள் 8 க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கபட்டுள்ளார்கள் , அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய பட வேண்டும் எனவும் , இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன்

தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். சொல்ல வேண்டிய காலம் அவ்வளவு தூரமெல்லாம் இல்லை. இன்னும் 8 மாதங்கள் தான்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : #Flash : தூய்மை பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? தமிழ்நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது.. விஜய் அட்டாக்..

RUPA

Next Post

மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் அதிமுகவில் இணைகிறார் EX எம்.எல்.ஏ நட்ராஜ்..!!

Thu Aug 14 , 2025
EX MLA rejoins AIADMK after giving apology letter..!!
1986522 natraj

You May Like