தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அரசியல் தலைவர்கள் இப்போதே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.
இந்த சூழலில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்று கூறி ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது.. முதலில் தேசிய கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறிய நிலையில் பின்னர் டிடிவி தினகரனும் வெளியேறினார். மறுபுறம் டிடிவி தினகரன் தவெக தலைவர் விஜய்க்கு மறைமுக ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இதனால் அவர் தவெக உடன் கூட்டணி வைக்கலாம் என பேச்சுகள் வந்தது. இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசி டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் ஒன்றிணைந்தால் தேர்தலில் வெற்றி நிச்சயம். கூட்டணி நிலைபாடு குறித்து யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
அதற்கு காலம் பதில் சொல்லும். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே கூட்டணி தொடர்பாக அறிவிப்பேன். பல கட்சிகள் எங்களை கூட்டணிக்கு அழைத்து வருகின்றன. பாஜக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் நாங்கள் கூட்டணியில் இணைய முடியாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை NDA கூட்டணியில் இணைய மாட்டேன் என்று டிடிவி தினகரன் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Read more: புத்தாண்டு முதல் இந்த 4 ராசிகளுக்கு வசந்த காலம் தொடங்கும்.. பண மழை தான்..!



