இனி தப்பிக்க முடியாது!… தேர்தல் குறித்த தவறான தகவலை சரிபார்க்க புதிய வலைதளம்!

Election: மக்களவை தேர்தல் குறித்து பரவும் தவறான தகவல்களை சரிபார்க்க, ”மித் வெர்சஸ் ரியாலிட்டி ரெஜிஸ்டர்” என்னும் புதிய வலைதளத்தை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்துடன் சேர்ந்து ஆந்திரா, அருணாச்சல், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தலும், 12 மாநிலங்களில் 25 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், மக்களவை தேர்தல் குறித்து தவறான தகவல்கள் பரவுவதை தடுப்பதற்காக புதிய வலைதளத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் இணைந்து வலைதளத்தை தொடங்கி வைத்தனர்.

அண்மையில் முறியடிக்கப்பட்ட போலி செய்திகளின் பரவல்கள், அது தொடர்பான உண்மை தகவல் குறித்து இந்த வலைதளத்தில் தொடர்ந்து பதிவேற்றப்படும். தவறான தகவல்கள் அதிகம் பரவிவரும் இந்த சூழலில் தேர்தல் நடைமுறை முழுவதும் துல்லியமான மற்றும் சரிபார்க்கப்பட்ட தகவல்களை வாக்காளர்கள் அனைவரும் பெறுவதை உறுதிப்படுத்த இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Readmore: BJP-க்கு புலிப்பாண்டி, எலிப்பாண்டியாக மாறி ஆதரவு அளித்த எடப்பாடி…!

Kokila

Next Post

பள்ளி வளாகத்தில் அலுவலகம்...! 30-ம் தேதி வரை டைம்...! கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு...!

Wed Apr 3 , 2024
பள்ளி வளாகத்தில் செயல்படக்கூடிய கல்வி அலுவலகங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய அரசு உத்தரவு. இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் செயல்பட்டுவருவதாகவும், அது பள்ளி நிர்வாகத்திற்கு இடையூறாக உள்ளதாகவும் அறிக்கை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அலுவலகங்களை உடனடியாக பள்ளி […]

You May Like