இன்றைய காலகட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் UPI பரிவர்த்தனை வசதியைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்து வருகிறது. இதற்காக UPI வசதி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான UPI ID- ஐ உருவாக்க முடியும். இதன் மூலம் மொபைல் நம்பரை வெளிப்படுத்தும் சிரமங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வசதியின் முக்கிய அம்சம் என்ன? யுபிஐ மூலம் பணம் பெறும்போது உங்கள் மொபைல் எண் அனுப்புநருக்கு தெரிந்துவிடும். ஆனால் பேடிஎமின் தனிப்பயன் யுபிஐ ஐடி வாயிலாக நீங்கள் விரும்பும் ID-ஐ உருவாக்கிக்கொள்ளலாம்.. உதாரணமாக, yourname@paytm. இதனால் தனியுரிமை காக்கப்படும், மேலும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளும் வகையிலும் இருக்கும்.
எப்படி செயல்படுத்துவது?
* பேடிஎம் செயலியில் உள் நுழையவும்.
* ப்ரொஃபைல் ஐகானை கிளிக் செய்யவும்
* UPI Settings என்பதில் சென்று, Manage UPI என்பதைத் தேர்வுசெய்யவும்
* அதில் தனிப்பயனாக்கப்பட்ட UPI ID-ஐ உருவாக்கி, செயல்படுத்தவும்.
யாருக்கு இது பயனளிக்கும்? தங்கள் எண்ணை பகிர விரும்பாதவர்கள், தொழில், தொழிற்துறைகளில் தனிப்பட்ட கணக்கை வைத்திருப்பவர்கள், டிஜிட்டல் பரிவர்த்தனையில் தனியுரிமையை விரும்புவோருக்கு இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.
Read more: Gold rate: 3 நாட்களுக்குப் பிறகு எகிறிய தங்கம் விலை.. கிராமுக்கு எவ்வளவு அதிகரித்தது தெரியுமா..?