அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க தேவையில்லை..!! தவெக அரசை விளாசிய பிரேமலதா விஜயகாந்த்..!!

premalatha

விவசாயிகளுக்கு நன்மை செய்ய அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க தேவையில்லை. இந்த ஜென்மத்திலேயே தேவையான நன்மைகளை செய்து முடிக்கலாம்” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.


தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகள் வெளியானதை தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

பட்ஜெட் குறித்துப் பேசிய அவர், “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் அமைப்பது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என தாங்கள் பெரிதும் எதிர்பார்த்ததாக தெரிவித்தார். ஆனால், விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான ஆக்கப்பூர்வமான தொழிற்சாலை திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது” என கூறினார்.

தமிழகத்தில் கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என விவசாயிகள் நீண்டகாலமாகக் கோரி வருவதை சுட்டிக்காட்டிய அவர், உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய கள்ளை இறக்குமதி செய்யவோ அல்லது மாநிலத்திலேயே இறக்கி விற்பனை செய்யவோ அரசு உரிய அனுமதியை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

Read More : மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது? அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்..!!

Next Post

தமிழ்நாட்டில் ஆன்லைனில் மது விற்பனையா? உண்மை என்ன? துறை அமைச்சரே கொடுத்த பரபரப்பு தகவல்..!!

Thu Aug 6 , 2026
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுபானங்களை நேரடியாக வீடுகளுக்கே விநியோகம் செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்றும், கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பாட்டிலுக்குக் கூடுதலாக ரூ.10 வசூலிப்பதைத் தடுக்கவுமே முன்பதிவு முறை சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆன்லைனில் மதுபானங்களை நேரடியாக வாங்குவதற்குச் சாத்தியமில்லை; மாறாக, இணையவழியில் முன்பதிவு மட்டுமே செய்ய முடியும். பொதுமக்கள் வழக்கம் […]
tasmac minister vignesh

You May Like