தீராத கடன் சுமையால் நிம்மதி இல்லையா..? செவ்வாய் அன்று இந்த முருகன் மந்திரத்தை சொல்லுங்க..!!

Murugan 2026

மனித வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடியும் தீராத கடன் சுமைகளும் ஒருவரது மன அமைதியை சீர்குலைத்து, நிம்மதியை இழக்க செய்யும் முக்கிய காரணிகளாக அமைகின்றன. இத்தகைய இன்னல்களில் இருந்து மீள்வதற்கும், இக்கட்டான சூழலை எதிர்கொள்ள தேவையான மன வலிமையை பெறுவதற்கும் ஆன்மீக ரீதியாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகுந்த பலனைத் தரும் என்பது இந்து சமய நம்பிக்கையாகும்.


குறிப்பாக, ஆன்மீக செம்மல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளால் அருளப்பட்ட எளிய துதிப் பாடலைச் செவ்வாய்க்கிழமைகளில் பாராயணம் செய்து வழிபடுவது கடன் தொல்லைகளிலிருந்து விடுபடவும், காரிய தடைகள் நீங்கி வெற்றி பெறவும் வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.

“செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்,

எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!

தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!

செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!”

இறை நம்பிக்கையோடு தொடர்ந்து 27 செவ்வாய்க்கிழமைகள், வீட்டில் அல்லது ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் திருவுருவத்தின் முன்பு நெய் தீபமேற்றி இந்தத் துதியை மனமுருகப் பாராயணம் செய்து வந்தால், விரைவிலேயே கடன் சுமைகள் படிப் படியாகக் குறைந்து நல்வழிகள் பிறக்கும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாக உள்ளது.

Read More : 70 வயதுக்கு மேல் இருந்தால் பதவிகள் பறிப்பு..!! இளைஞர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி..!! முக.ஸ்டாலின் அதிரடி முடிவு..!!

Next Post

பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றியபோது கவனம் ஈர்த்த பெண் ராணுவ அதிகாரி!. யார் இந்த கேப்டன் சோனியா சிங் சவுகான்?

Sun Aug 16 , 2026
இந்தியா தனது 80வது சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடியது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், பிரதமருக்கு அருகில் நின்று தேசியக் கொடியேற்ற உதவிய பெண் ராணுவ அதிகாரி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்தப் பெண் ராணுவ அதிகாரியின் பெயர் கேப்டன் சோனியா சிங் சவுகான் என்பதாகும். இவர் நாடு முழுவதும் இணையத்தில் அதிக அளவில் […]
CaptainSoniaSinghChauhan

You May Like