வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், நாட்டில் வெளிநாட்டு கலாச்சார செல்வாக்கை அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மேற்கத்திய சொற்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளார். அதன்படி “ஹாம்பர்கர்”, “ஐஸ்கிரீம்”, “கரோக்கி” போன்ற வார்த்தைகள் இனி வட கொரியாவில் சொல்லக்கூடாது. அவற்றுக்கு அரசு அங்கீகரித்த உள்ளூர் பெயர்கள் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு முதலில் சுற்றுலா துறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வொன்சன் கடற்கரை ரிசார்ட்டில் பணியாற்றும் சுற்றுலா வழிகாட்டிகள், சர்வதேச சுற்றுலாப் பயணிகளுடன் பேசும் போது மேற்கத்திய சொற்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரசாங்கம் நடத்தும் பயிற்சி வகுப்பில், அவர்கள் அரசு அங்கீகரித்த சொற்களையே மனப்பாடம் செய்து பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஐ.நா. அறிக்கையின்படி, 2014 முதல் வட கொரிய அரசு வெளிநாட்டு ஊடகங்களும், சோசலிச சித்தாந்தத்துக்கு முரணான வெளிப்பாடுகளும் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேற்கத்திய நாடுகளின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் போன்றவற்றை பார்ப்பதற்கும், அந்நாட்டு ஆடைகளை அணிவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனைகள் கூட வழங்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
Read more: உணவுக்கு பின் சிறிது நேரம் நடப்பதால் 9 நன்மைகள் கிடைக்கும்.. என்னென்ன தெரியுமா..?



