இனி வெறும் ரூ. 12 மட்டும் தான்..!! ஆவின் நிர்வாகத்தின் அடுத்த அதிரடி..!!

Aavin 2025

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின், தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக குறைந்த விலையில் புதிய ‘மில்க் ரஸ்க்’ விற்பனையை மாநிலம் முழுவதும் அறிமுகம் செய்துள்ளது.


தமிழக அரசின் பால் வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம், நாள்தோறும் லட்சக்கணக்கான நுகர்வோருக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சீராக விநியோகித்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள ஆவின் பாலகங்கள் மற்றும் முகவர்கள் மூலமாக பால் மட்டுமின்றி பால்கோவா, பாதாம் பவுடர், தூய நெய், பன்னீர், பிஸ்கட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

சமீபத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் அவசரகால கால்நடை மருத்துவ சிகிச்சைக்காக ‘பாரத் சஞ்சீவினி’ என்ற சிறப்பு செயலியும் தொடங்கப்பட்டது. இச்சேவையின் கீழ் கால்நடை வளர்ப்போர் 18004252577 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், கால்நடை மருத்துவர்கள் நேரடியாக இல்லம் தேடி வந்து மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ‘ஆவின் மில்க் ரஸ்க்’ விற்பனையை நிர்வாகம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 100 கிராம் எடையுள்ள ரஸ்க் பாக்கெட் ரூ. 20 என்ற விலையிலும், 60 கிராம் எடையுள்ள ரஸ்க் பாக்கெட் ரூ.12 என்ற எளிய விலையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களின் ரஸ்க் விலையை காட்டிலும் இது குறைவாக இருப்பதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஆவின் மில்க் ரஸ்க் பாக்கெட்டுகள் தற்போது அனைத்து ஆவின் பாலகங்களிலும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Read More : காவிரி விவகாரத்தில் அடுத்த பாய்ச்சல்..! இனியும் கெஞ்ச முடியாது..! சுப்ரீம் கோர்ட்டை நாடிய தமிழக அரசு..!

Next Post

ரூ.100 கோடி அப்பு..!! வங்கிக் கணக்கை பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!! அடுத்த நொடியே நடந்த ட்விஸ்ட்..!!

Mon Aug 3 , 2026
மேற்கு வங்கத்தில் கேஸ் சிலிண்டர் மானிய தொகையை சரிபார்க்க வங்கிக்கு சென்ற ஏழை பெண்ணின் கணக்கில் சுமார் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம் குல்தாலி பகுதியை சேர்ந்தவர் காஷ்மீரா ஷேக். ஜரி தையல் தொழில் செய்து வரும் இவர், மிகவும் எளிமையான குடும்ப பின்னணியை கொண்டவர். இந்நிலையில், மத்திய அரசின் சமையல் […]
West Bengal 2026

You May Like