பாகிஸ்தான் ராணுவத் தலைவர் பீல்ட் மார்ஷல் அசிம் முனீர், அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்வில், இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத மிரட்டல் விடுத்ததால் சர்வதேச அளவில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டாம்பா நகரத்தில் நடந்த இரவு விருந்தில், அவர் பேசுகையில், “நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு. எங்களை அழிக்க முயற்சி செய்தால், நாங்கள் பாதி உலகத்தையும் எங்களுடன் அழித்துச் செல்வோம்.” என்றார். இது, ஒரு நாட்டின் ராணுவத் தலைவர் மற்றொரு நாட்டுக்கு, அமெரிக்க நிலத்தில் இருந்து அணு மிரட்டல் விடுப்பது என்பது முதல்முறையாகும்.
மேலும் அவர் பேசுகையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் இந்தியா முடிவு, 2 கோடி மக்களை பட்டினியில் கிடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மட்டும் அணையை கட்டினால், 10 ஏவுகணகளை கொண்டு அதை தகர்ப்போம். சிந்து நதி என்பது இந்தியாவின் குடும்ப சொத்து இல்லை. எங்களுக்கு ஏவுகணைகளுக்கு ஒன்றும் பற்றாக்குறை இல்லை பாகிஸ்தான் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உலகில் பாதியை அழித்துவிடுவோம் என்று அவர் மிரட்டியுள்ளார்.
இந்த அமெரிக்கப் பயணம், முனீரின் இரண்டாவது பயணமாகும். கடந்த ஜூன் மாதம், அமெரிக்கா சென்ற போது, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் நேரில் சந்தித்து, மதிய உணவில் கலந்துகொண்டார். பொதுவாக, இத்தகைய மரியாதை ஒரு நாட்டுத் தலைவர் மட்டுமே பெறும் நிலையில், ஒரு ராணுவத் தலைவருக்காக நடந்த இச்சந்திப்பு சர்வதேச கவனத்தை ஈர்த்தது. ட்ரம்ப், பாகிஸ்தானுடன் எண்ணெய் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடர்பாக புதிய ஒத்துழைப்புகளை அறிவித்தார். இந்திய அரசு, முனீரின் பேச்சை “பொறுப்பற்ற அணு மிரட்டல்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளது.
Read more: உலகின் மிக நீளமான, கனமான ரயில் இதுதான் : 8 எஞ்சின்கள், 682 பெட்டிகள், 5,648 சக்கரங்கள்!