PM MODI | “ஊழல்வாதிகள் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் உள்ளனர்”… கெஜ்ரிவால் விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலடி.!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் .

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ” ஊழல்வாதிகளுக்கு என்றுமே தலை வணங்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார். மிகப்பெரிய ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை தொடர்பாக நடைபெற்ற ஊழலில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது முதல் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டித்து எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி தலைவர்கள் ராம் லீலா மைதானத்தில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டம் முடிந்த சில மணி நேரங்களில் அந்தக் கூட்டத்திற்கு சரியான பதிலடி வழங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரெட் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளரான அருண் கோவில் என்பவரை ஆதரித்துதேர்தல் பரப்புரை செய்தார். அருண் கோவில் ராமானந்த இயக்கிய ராமாயணத்தில் ஸ்ரீ ராமராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதிய ஜனதா கட்சி இந்த வருட பாராளுமன்ற தேர்தலில் 370 சீட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Read More: வெளிநாட்டு இந்தியர்களை திரும்ப வர வேண்டம் என்று எம்.ஆர்.ராதா கூறினாரா? ராதிகா விளக்கம்…!

Next Post

"BJP மேட்ச் பிக்சிங் வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டம் அழிக்கப்படும்"… ராகுல் காந்தி எச்சரிக்கை.!!

Sun Mar 31 , 2024
BJP: தேர்தலில் மேட்ச் பிக்சிங் செய்து பாஜக வெற்றி பெற்றால் இந்திய அரசியலமைப்பு சட்டம் அழிந்துவிடும் என ராகுல் காந்தி(RAHUL GANDHI) எச்சரித்து இருக்கிறார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை கண்டித்த இந்திய கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி(RAHUL GANDHI) இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்களின் உதவியுடன் தேர்தல் மேட்ச் […]

You May Like