RTI சட்டம்..! அதிகாரிகள் மாதம் தோறும் 5-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்…! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!

tn school 2025

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்படும் தகவல்களை துரிதமாக வழங்குவதற்காக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: ”பள்ளிக் கல்வித்துறையில் உள்ள முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பொதுத் தகவல் வழங்கும் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்கள் விவரங்கள் பெறப்பட்டுள்ளன.

தற்போது இந்த அலுவலர்களுக்கு பயனர் குறியீடு (யூசர் நேம்), கடவுச்சொல் (பாஸ்வேர்டு) தனித்தனியாக உருவாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பயனர் குறியீட்டை மாற்றம் செய்ய இயலாது. கடவுச்சொல்லை மாற்றி பின்னர் உள் நுழைந்து பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பொதுத் தகவல் அலுவலரும் தினமும் https://rtionline.tn.gov.in/RTIMIS/NODAL/index.php என்ற இணையதளத்தில் திறந்து பார்க்க வேண்டும்.

அதில் வந்துள்ள தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்கள், மேல்முறையீட்டு மனுக்கள் ஆகியவற்றை பதிவு செய்து உடனுக்குடன் உரிய தகவலை இணையதளம் வழியாக வழங்க வேண்டும். இதற்கு என ஒரு பதிவேடு பராமரிக்கப் பட வேண்டும். இது சார்ந்து மாதந்தோறும் 5ம் தேதி உயரதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த செயல்பாடுகளுக்காக தனி அலுவலர் மற்றும் தட்டச்சரை நியமித்து தினமும் கண்காணித்து உரிய காலக் கெடுவுக்குள் துரிதமாக தகவல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

1-ம் வகுப்பு முதல் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை...! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.‌‌..!

Fri Oct 31 , 2025
பீடி மற்றும் திரைப்பட துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி நாள். மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். 1-ம் வகுப்பு முதல் கல்லூரி, ஐடிஐ / டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை கல்வி […]
School Money 2025

You May Like