“மானே.. தேனே.. பொன்மானே”..!! எதுக்கு இந்த இரட்டை வேடம்..? தவெக அரசை விளாசிய உதயநிதி..!!

Vijay Udhayanidhi 2026

கடந்த சில தினங்களுக்கு முன்பு எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரையும் கைது செய்து, அவர்களின் படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தற்போது மீனவர்கள் 9 பேரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சனை தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தவெக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

மீனவர் பிரச்சனையில், ‘மானே – தேனே – பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?

ஆட்சிக்கு முன், ஆட்சிக்குப் பின் என ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவது போல, மீனவர் பிரச்சனையிலும் இந்த சோஃபா மாடல் அரசு ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது. இவர்கள் சொன்ன அந்த உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Read More : கோவை என்ன பாகிஸ்தானிலா இருக்கு..? தேசியக்கொடி ஏந்தி பேரணி செல்வது பாவச்செயலா? தவெக அரசை விளாசிய ஐகோர்ட்..!!

Next Post

மாநில முதலமைச்சர்களுக்கு தேசியக்கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்த தமிழ்நாடு..!! வரலாற்றை மாற்றி எழுதிய கருணாநிதி..!!

Sat Aug 15 , 2026
இந்தியாவின் சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றுவதும், மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவதும் வழக்கமான நிகழ்வாக மாறியுள்ளது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநிலங்களில் ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்த நிலையில், அந்த மரபை மாற்றி அமைத்து வரலாற்றுப் புரட்சிக்கு வித்திட்ட பெருமை தமிழ்நாட்டையே சேரும். கடந்த 1974 ஆம் ஆண்டு […]
Independence Day 2026

You May Like