முக்கிய அறிவிப்பு…! ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும்…!

tn govt 2025 3

காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது மற்றும் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி துறை இயக்குநர், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து நிதி வழங்கப்படும். இந்த பள்ளிகள் மாணவர்களை அதிக அளவில் சேர்த்திருக்க வேண்டும். மாணவர்கள் இடைநிற்றலை தவிர்த்ததுடன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் சிறப்பாக இருக்க வேண்டும்.

கலை, இலக்கியம், நாடகம் போன்ற துறைகளில் மாணவர்களை நன்கு ஊக்கப்படுத்தி இருக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி குழு ஆகியவை சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். புரவலர்களையும் அதிக அளவில் சேர்த்திருக்க வேண்டும். இந்த திட்டம் மூலம் பெறும் நிதியை கொண்டு பள்ளிகளில் குடிநீர், கழிப்பறைகள், ஆய்வகம், நூலக மேம்பாடு, சுற்றுச்சுவர் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

இதுதவிர, இந்த ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். காமராஜரின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தி,பரிசுகள் வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். இதற்காக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஃபார்முலா 1 (F1) என்றால் என்ன?. கார்கள், ஓட்டுநர்கள், அணிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முழு விவரங்களும் இதோ!.

Mon Jul 14 , 2025
உலகெங்கும் கார் ரேஸுக்கான ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வருகிறார்கள். பல முக்கிய நாடுகளிலும் கார் ரேஸ்கள் நடந்து வருகிறது. இதேபோல் நம்ம சிங்கார சென்னையிலும் பார்முலா கார் போட்டிகள் நடக்கும். அதாவது, பார்முலா ரேஸ்கள் பொதுவாகப் பிரத்தியேக டிராக்குகளிலும் நடக்கும் ஸ்ட்ரீட் சர்க்யூட்களிலும் நடக்கும். கார் ரேஸில் உச்சமாகக் கருதப்படுவது தான் ஃபார்முலா 1. சர்வதேச அளவில் தலைசிறந்த டிரைவர்கள், நிறுவனங்கள் இருக்கும் ஒரு ரேஸ். இதில் உலகெங்கும் […]
Formula 1 F1 car race 11zon

You May Like