EPS பாதுகாப்பு வாகனம் மோதி இளைஞர் பலி..! அதிர்ச்சி வீடியோ.. சிவகங்கையில் பரபரப்பு!

sivagangai death

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதியதால் இளைஞர் பலி ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று இரவு சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்த எடப்பாடி பழனிச்சாமி, அடுத்தகட்டமாகப் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே கார் அணிவகுப்பு சென்றுக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாகப் பாதுகாப்பிற்கு வந்த வாகனம் ஒன்று சாலையைக் கடக்க முயன்ற நபர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த நபர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதகுபட்டி காவல்துறையினர், உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் சிவகங்கை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (27) என்பது தெரியவந்தது. பிரசாரக் கூட்டத்தைப் பார்க்க வந்தாரா அல்லது தற்செயலாகச் சாலையைக் கடந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாதுகாப்பு வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமியில் பிரச்சார வாகனம் மோதி இளைஞன் உயிரிழந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

Subscribe to my YouTube Channel

Read more: தவெக யாருடைய வாக்குகளை பிரிக்கும்..? டெல்லிக்கு போன ஷாக் ரிப்போர்ட்..! விஜய்யை வைத்து அமித்ஷா போடும் ஸ்கெட்ச்..!

English Summary

One person dies after being hit by EPS security vehicle..! Shocking CCTV footage.. Sensation in Sivagangai!

Next Post

இன்று முதல் இண்டிகோ விமான டிக்கெட் விலை உயர்வு..! பயணிகள் கவலை..

Thu Apr 2 , 2026
IndiGo Fares Set To Rise From April 2, Flights To Get Costlier
a8b08a98 42f2 47f4 b685 f335c5361694

You May Like