வெறும் 17 வாக்குகள் மட்டுமே பதிவு – அதிர்ச்சி கொடுத்த ஏகனாபுரம் மக்கள்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 5,200 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில் விவசாய நிலங்கள், நீர் நிலைகள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகள் என பல இடங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முழுமையாக இந்த விமான நிலையத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து ஏகனாபுரம் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்கள் போராட்டம் 625 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இவர்கள் போராட்டம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், 1400 வாக்காளர்கள் உள்ள ஏகனாபுரம் கிராமத்தில் இன்று இதுவரை ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை.மக்கள் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிட்டு வாக்களிக்கும்படி தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் எந்த பேச்சுவார்த்தையும் எடுபடவில்லை. இந்த நிலையில் மாலை 7 மணி நிலவரப்படி வெறும் 17 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More: தமிழகத்தில் 7மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு..! அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67%..! குறைந்தபட்சம் மத்திய சென்னையில் 67.35%..!

Baskar

Next Post

பாரிஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் வெடிகுண்டு மிரட்டல்.. ஒருவர் கைது!

Fri Apr 19 , 2024
பிரான்சில் உள்ள ஈரான் துணை தூதரகத்தில், வெடிகுண்டு பெல்ட் அணிந்து வெடிக்க செய்வதாக மிரட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரீசில் உள்ள ஈரான் தூதரகத்தில் வெடி குண்டு ஜாக்கெட்டுடன் ஒருவர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து ஏராளமான ஆயுதம் ஏந்திய போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். ஈரான் தூதரகத்தில் போலீசார் நடத்திய சோதனைக்கு பிறகு அந்த நபரை கைது செய்தனர். இதுகுறித்து பிரான்ஸ் போலீசார் கூறியதாவது, “வெடிகுண்டு […]

You May Like