தமிழகத்தில் 7மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு..! அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67%..! குறைந்தபட்சம் மத்திய சென்னையில் 67.35%..!

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09%வாக்குப்பதிவு.

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றினர். இரவு 7 மணியளவில் பல வாக்குச்சக்காவடியில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. சில வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்நிலையில் இரவு 7மணி நிலவரப்படி தமிழகத்தில் 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 வாக்கு சதவிகிதமும், அடுத்தபடியாக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 75.44%, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 74.87 சதவிகிதமும் வாக்குப்பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகளும் பதிவு.

  1. கள்ளக்குறிச்சி 75.67
  2. தர்மபுரி 75.44
  3. சிதம்பரம் 74.87
  4. பெரம்பலூர் 74.46
  5. நாமக்கல் 74.29
  6. கரூர் 74.05
  7. அரக்கோணம் 73.92
  8. ஆரணி 73.77
  9. சேலம் 73.55
  10. விழுப்புரம் 73.49
  11. திருவண்ணாமலை 73.35
  12. வேலூர் 73.04
  13. காஞ்சிபுரம் 72.99
  14. கிருஷ்ணகிரி 72.96
  15. கடலூர் 72.40
  16. விருதுநகர் 72.29
  17. பொள்ளாச்சி 72.22
  18. நாகப்பட்டினம் 72.21
  19. திருப்பூர் 72.02
  20. திருவள்ளூர் 71.87
  21. தேனி 71.74
  22. மயிலாடுதுறை 71.45
  23. ஈரோடு 7142
  24. திண்டுக்கல் 71.37
  25. திருச்சிராப்பள்ளி 71.20
  26. கோயம்புத்தூர் 71.17
  27. நீலகிரி 71.07
  28. தென்காசி 71.06
  29. சிவகங்கா 71.05
  30. ராமநாதபுரம் 71.05
  31. தூத்துக்குடி 70.93
  32. திருநெல்வேலி 70.46
  33. கன்னியாகுமரி 70.15
  34. தஞ்சாவூர் 69.82
  35. ஸ்ரீபெரும்புதூர் 69.79
  36. வடசென்னை 69.26
  37. மதுரை 68.98
  38. தேன்சென்னை 67.82
  39. மத்தியசென்னை 67.35

Kathir

Next Post

வெறும் 17 வாக்குகள் மட்டுமே பதிவு - அதிர்ச்சி கொடுத்த ஏகனாபுரம் மக்கள்

Fri Apr 19 , 2024
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 5,200 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில் விவசாய நிலங்கள், நீர் நிலைகள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகள் என பல இடங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முழுமையாக இந்த விமான நிலையத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்படுகின்றன. இதனைத் […]

You May Like