DmK-வை தோற்கடித்தால் தான் ரூ.1,000 உரிமைத் தொகை கிடைக்கும்…! வானதி சீனிவாசன்

மக்களவைத் தேர்தலில் திமுகவை தோற்கடித்தால் தான் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 உரிமைத் தொகை கிடைக்கும்.

இது குறித்து பாஜக எம்எல்ஏ வாணலி ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்களவைத் தேர்தலில் திமுகவை தோற்கடித்தால் தான் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 உரிமைத் தொகை கிடைக்கும். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது.

ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தகுதி உள்ள குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி 2 கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1,000 உரிமைத் தொகை மறுக்கப்பட்டது. இந்த மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் இரண்டு கோடி பேருக்கும் உரிமை தொகை எப்போதுமே கிடைக்காது. மாறாக இந்தமக்களவைத் தேர்தலில் திமுகவை தோற்கடித்தால் அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ரூ. 1,000 உரிமைத் தொகை கிடைக்கும்.

எனவே தமிழ்நாட்டு வாக்காளர்கள் குறிப்பாக பெண்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களித்து திமுகவை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

பூமி சுழல்வதை நிறுத்திவிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!!

Wed Apr 17 , 2024
பூமி அதன் சுற்றுப்பாதையில் தொடர்ந்து சுழல்கிறது. அந்தச் சுழற்சியின் காரணமாக பூமியில் பகலுக்கும், இரவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதனால் பருவங்கள் மாறுகின்றன. ஆனால், பூமியின் இயக்கத்தின் விளைவை நாம் வெளிப்படையாகப் புரிந்துகொள்வது போல, பூமி சுழல்வதை நிறுத்தினால் என்னவாகும் தெரியுமா? இதுபற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். பூமி சுழலும்போது, ​​நாம் அதை தனித்தனியாக உணர முடியாது. ஏனெனில், நாமும் அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். பூமி ஒரு […]

You May Like