ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ஆபரேஷன் அகல் நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் இன்று காலை தெரிவித்துள்ளது. இப்பகுதியில் இன்னும் நடவடிக்கை நடந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் அகல் வனப்பகுதியில், பயங்கரவாதிகள் இருப்பது குறித்து ராணுவத்திற்கு உளவுத்துறை தகவல்கள் கிடைத்தது.. இந்த தகவல்களின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.. அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.. இப்பகுதியில் இன்னும் நடவடிக்கை நடந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது..
இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் “ இரவு முழுவதும் இடைவிடாத மற்றும் தீவிரமான துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது. எச்சரிக்கையாக இருந்த துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு மூலம் பதிலடி கொடுத்தனர்.. இதுவரை ஒரு பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் வீழ்த்தப்பட்டுள்ளார்,” என்று பதிவிட்டுள்ளது.
பயங்கரவாதிகள் இருப்பது குறித்து உளவுத்துறை தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது நிலைமை துப்பாக்கிச் சண்டையாக மாறியது.
இதனால் பாதுகாப்பு படையினர் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. “அப்பகுதியில் கூடுதல் பணியாளர்கள் குவிக்கப்பட்டு, சுற்றி வளைப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது,” என்று ஒரு அதிகாரி கூறினார்.
ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) அருகே சமீபத்தில் ஒரு என்கவுண்ட்டர் நடந்தது.. அங்கு ஊடுருவல் முயற்சியைத் தொடர்ந்து இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.
இதனிடையே, ‘ஆபரேஷன் மகாதேவ்’ இன் கீழ், ஜூலை 28 அன்று ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஹர்வானுக்கு அருகிலுள்ள லிட்வாஸ் காட்டில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்தியப் படைகள் வீழ்த்தின.
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமான மூவரும் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார்..
மக்களவையில் பேசிய ஷா, கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் தாக்குதலின் முக்கிய திட்டமிடுபவரான சுலைமான் என்று அடையாளம் காட்டினார். மற்றவர்கள் ஆப்கான் மற்றும் ஜிப்ரான் என பெயரிடப்பட்டனர்.. அனைவரும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் மூத்த செயல்பாட்டாளர்கள் என்றும் தெரிவித்தார்..
இந்த தீவிரவாதிகளுக்கு தங்குமிடம் வழங்கியதற்காக NIA ஆல் முன்னர் கைது செய்யப்பட்ட நபர்களால் அவர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
Read More : பிரதமர் மோடியை கார்னர் செய்யும் எதிர்க்கட்சிகள்!. அடுத்த பிரதமர் இவர்தான்!. மெகா பிளான்!