ஆபரேசன் சாகர் பந்து – இலங்கைக்கு 1000 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பும் இந்தியா…!

srilanka 2025

ஆபரேசன் சாகர் பந்து – இலங்கைக்கு 1000 டன் நிவாரணப் பொருட்களை வழங்க இந்திய கடற்படை மேலும் நான்கு போர்க்கப்பல்களை அனுப்புகிறது.


இலங்கைக்கு தேடல் மற்றும் மீட்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஆபரேசன் சாகர் பந்து நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதநேய உதவிகளை வழங்குவதற்காக இந்திய கடற்படை ஐஎன்எஸ் கரியல், எல்சியு 54, எல்சியு 51, எல்சியு 57 ஆகிய நான்கு கப்பல்களை அனுப்பியுள்ளது.ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் சுகன்யா ஆகியவை முன்னர் நிவாரண உதவி மற்றும் ஹெலிகாப்டர் மூலம் ஆதரவை வழங்கியிருந்தன.

மூன்று எல்சியு-க்கள் டிசம்பர் 07, 2025 அன்று காலை கொழும்பு வந்து, முக்கியமான நிவாரணப் பொருட்களை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்தன. மனிதாபிமான உதவிப் பணியைத் தொடர ஐஎன்எஸ் கரியல் கப்பல் டிசம்பர் 08 அன்று திருகோணமலைக்கு வர உள்ளது.1000 டன் பொருட்களை உதவிக்காக வழங்குவதன் மூலம், இந்தக் கப்பல்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான உறவுகளையும், நமது அண்டை நாடுகளுக்கு சரியான நேரத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டையும் வலியுறுத்துகிறது.

Vignesh

Next Post

நாடு முழுவதும் 34,232 கிலோ மீட்டர் நீளத்திற்கு எரிவாயு விநியோக குழாய்கள்...!

Tue Dec 9 , 2025
நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் குழாய் அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள ஏதுவாக எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நிலத்திற்கு அடியில் அமைத்துள்ள குழாய்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. முறையான அனுமதியின்றி நிலத்தை தோண்டும் நடவடிக்கைகள் காரணமாக நிலத்திற்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு […]
pipe gas 2025

You May Like