ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை பொது தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் போட்டியிட்டிருந்தார். அந்த தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றிப் பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.


அதில், “ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பணப் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தேனி தொகுதியில் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளிவைக்கவில்லை” என்று கூறியிருந்தார்.

அதேநேரம் “இந்த தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அந்த வழக்கை ஏற்கக்கூடாது” என ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், ரவீந்திரநாத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. தொடர்ந்து மிலானி என்பவர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது.

அப்போது மிலானி தரப்பில், “ஓபி ரவீந்திரநாத், முதன்முறை வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு அதில் திருத்தங்களை செய்து அதன் பின் மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்தார். அதையே தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டுள்ளார். இதிலேயே சட்டவிரோதம் அதிகார துஷ்பிரயோகம் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்” என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார்.

தற்போது சென்னை நீதிபதி தீர்ப்பில், “தேர்தல் மனு ஏற்கப்படுகிறது. எம்.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது” என்று அறிவித்துள்ளார். “தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை அமல்படுத்துவதற்குள், மேல் முறையீடு செய்யும் வரை இந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும்” என்ற கோரிக்கை ரவீந்திரநாத் தரப்பில் வைக்கப்பட்டது. ஓபி ரவீந்திரநாத் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வெற்றி செல்லாது என்ற தீர்ப்பினை எதிர்த்துமேல் முறையீடு செய்ய ஒரு மாத கால அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RUPA

Next Post

நடிகை பாவனிக்கு இப்படி ஒரு நிலைமையா..? மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படங்கள்..!!

Thu Jul 6 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி என்ற தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிலையில் பாவனி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர், என் வாழ்க்கையின் இந்த 15 நாட்களைக் கழிப்பது மிகவும் கடினமாக இருந்தது. என்னுடைய கழுத்தில் சிறிய வலியுடன் இந்த […]
நடிகை பாவனிக்கு இப்படி ஒரு நிலைமையா..? மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படங்கள்..!!

You May Like