தவெகவில் இணையும் OPS, TTV தினகரன்..? அஸ்திவாரம் போட்டாச்சு..! செங்கோட்டையன் சொன்ன மேட்டர்.. பதறும் EPS..

ops ttv vijay

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக-வின் கூட்டணி நிலைபாடுகள் குறித்த புதிய தகவல்கள் கசிந்துள்ளன. 


தவெக உயர்மட்ட நிர்வாகக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார், அவர் பேசுகையில், “ஓபிஎஸ் அனைத்து மாவட்டச் செயலாளர்களுடனும் நடத்திய ஆலோசனையின் படி, எந்த காலகட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என்று உறுதியுடன் இருக்கிறார். விரைவில் நல்ல முடிவை எடுப்பார்.

இந்த பொங்கலுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை பார்க்கலாம். பொங்கலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பலரும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வர இருக்கிறார்கள். அமமுகவும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. வரும் 27, 28 மலேசியாவில் தனது படம் தொடர்பான நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொள்ள இருக்கிறார். அதன் பிறகு எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்பது அறிவிக்கப்படும்.

கட்டுப்பாடுகள் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும் அதையெல்லாம் தாண்டி மக்களின் மனதில் அவர் நின்று கொண்டிருக்கிறார். 2026ஆம் ஆண்டு அவர் ஆட்சி பீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது. கூட்டம் கூட்டுவதற்கு அனைவரும் செலவு செய்கிறார்கள். ஆனால் செலவே செய்யாமல் அவருக்கு கூட்டம் கூடுகிறது. எதிர்கால தமிழகத்தை விஜய் ஆளவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Read more: “எந்த தாமதமும் இருக்கக் கூடாது”..!! பள்ளிகள் திறந்த முதல் நாளே பாடப்புத்தகம்..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

English Summary

OPS, TTV Dhinakaran to join TVK..? The foundation has been laid..! The matter said by Sengottaiyan.. EPS is worried..

Next Post

தந்தை கண்முன்னே மகளை கடத்திச் சென்ற காதலன்..!! காருக்குள் வைத்தே..!! விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!!

Thu Dec 25 , 2025
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே காதலனுடன் செல்ல விருப்பம் தெரிவித்த இளம்பெண்ணை தந்தை கண்முன்னே காரில் கடத்தி, ஓடும் காரிலேயே காதலன் தாலி கட்டிய சினிமா பாணி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி சோலூர்மட்டம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (20) மற்றும் மணிகண்டன் (25) ஆகிய இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு […]
insta love

You May Like