2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற பெயரில், ஜூலை 23-ம் தேதி வரை கொங்கு மண்டலம், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இப்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் பாஜக மற்றும் அமமுக ஆகியோருடன் ஓபிஎஸ் நெருக்கம் காட்டி வந்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தொடர்ந்து தேசிய ஜன நாயக கூட்டணியில் நீட்டிப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. சமீபத்தில் கூட மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் கூட ஓபிஎஸ் அழைக்கப்படவில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இது அவரது ஆதரவாளர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஓபிஎஸ் ஆதரித்து வரும் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், யாருக்கு ஆதரவாக அல்லது யாருக்கு எதிராக மக்களை சந்திப்பார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Read more: ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய மல்யுத்த வீராங்கனைகள்.. ஒரு வருடம் சஸ்பெண்ட்..!!