ஆரஞ்ச் அலர்ட்!… வடமாநிலங்களை நடுங்க வைக்கும் கடும் குளிர்!… மைனஸ் டிகிரியில் வெப்ப நிலை!

டெல்லியில் அடுத்த 2 நாட்களுக்கு கடுமையான மூடுபனி நிலவும் என்பதால் இந்திய வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. கடும் குளிரும் நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் வெப்பநிலை ஒற்றை இலக்கங்களில் பதிவாகி வருகிறது. இமாச்சலப்பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் மைனஸில் வெப்ப நிலை பதிவாகி வருவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

டெல்லி-என்சிஆர் பகுதியில் இன்று அடர்ந்த மூடுபனி காணப்பட்டது. வெப்பநிலை கிட்டத்தட்ட 7 டிகிரிக்கு குறைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியின் இந்தியா கேட், சராய் காலே கான், எய்ம்ஸ், சஃப்தர்ஜங் மற்றும் ஆனந்த் விஹார் பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மூடுபனி சூழ்ந்திருந்தது. இதனால் விடிந்த பிறகும் கூட வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இரவிலும் கூட குளிரின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் மக்கள் பலர் தங்குமிடங்களில் தஞ்சம் புகுந்தனர். பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பனிமூட்டம் பரவுவதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்களை இந்திய வானிலை மையம் வெளியிட்டது.

மேலும் அடர்ந்த மூடுபனி காரணமாக மக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் அடர்த்தியான முதல் மிக அடர்த்தியான மூடுபனி தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் இன்று முதல் 28 ஆம் தேதி வரை கடும் பனிமூட்டம் நிலவும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

ராஜஸ்தான் மற்றும் வடக்கு மத்தியப் பிரதேசத்தில் இன்றும் நாளையும் அடர்த்தியான முதல் மிக அடர்த்தியான மூடுபனி நிலைகள் தொடர வாய்ப்புள்ளது என்றும் வானிலை கூறியுள்ளது. டெல்லியில் அடுத்த 2 நாட்களுக்கு கடுமையான மூடுபனி நிலவும் என்பதால் இந்திய வானிலை மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. பனியை பொறுத்தவரை ஆரஞ்ச் அலர்ட் என்பது 50 மீட்டர் குறைவான தொலைவில் உள்ள பொருட்களை மட்டுமே பார்க்க முடியும் என்பமு குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

தட்டி தூக்கிய காவல்துறை...! கட்டட டெண்டர்கள் விடுவதில், அரசின் பணம் மோசடி...! முக்கிய புள்ளி கைது...!

Wed Dec 27 , 2023
போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த புகாரில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், மாநகர போலீசாரால் கைது கடந்த மாதம் நவம்பர் 6 ஆம் தேதி, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம், அரசு சாரா தனியார் நிறுவனமான பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை உடன் இணைந்து கல்வித் திட்டங்களை மேற்கொள்வதற்கான அட்டவணை நிகழ்ச்சி நிரலை […]

You May Like