கர்நாடகாவில் இந்து அமைப்பு நிர்வாகியின் செல்போனில் 50க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்துஜாகரணா வேதிகே என்ற அமைப்பின் தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகியாக உள்ள சமித் ராஜ் தரகுட்டே, சமீபத்தில் தனியார் பஸ்ஸில் கல் வீசியதாக கூறப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சமித் ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, அவரது செல்போனும் போலீசார் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் வந்த தகவல்கள் போலீசை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், அதோடு கூட ஒரு முக்கிய அரசியல் தலைவரின் ஆபாச வீடியோவும் அந்த மொபைலில் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் கடலோர மாவட்ட பகுதிகளில் அரசியல் தலைவராக வலம் வரும் ஒரு முக்கிய நபர் ஆவர்.. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து போலீசார் சமித் ராஜுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். போலீசார் கூறுகையில், “அவரிடம் விரிவாக விசாரணை மேற்கொண்டாலே மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது. இது ஒருவரது தனிப்பட்ட ஆபாச பயன்பாட்டை தாண்டி, அரசியல் மற்றும் சமூக ரீதியாக தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய விவகாரமாக மாறக்கூடும்,” என தெரிவித்துள்ளனர்.
Read more: ‘உத்தரபிரதேச டைகர்’ என அழைக்கப்படும் மூத்த அரசியல் தலைவர் குன்வர் ஆனந்த் சிங் காலமானார்..!!