ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறுவதற்கான காப்பீட்டை மத்திய அரசு வழங்குகிறது. இந்தியாவில் மருத்துவ செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, குறிப்பாக தனியார் மருத்துவமனைகளைச் சார்ந்திருப்பவர்களுக்கு அல்லது நாள்பட்ட நோய்களை நிர்வகிப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் குறிப்பிடத்தக்க நிதிச் சுமையை ஏற்படுத்துகின்றன. இந்தச் சிரமத்தைக் குறைக்க, இந்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா […]
என் மூச்சிருக்கும் வரை நான் தான் பாமக தலைவர் என்று ராமதாஸ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாமக தலைமை பொறுப்பு தொடர்பாக ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், அன்புமணியுடன் கருத்து வேறுபாடு விவகாரத்தில் இன்னும் முடிவு வரவில்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “ சமரசம் பேசுகிறோம்.. பேசிக்கொண்டே இருக்கிறோம்.. எல்லா பிரச்சனைக்கும் முடிவு […]
நெய் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் பல வகையான சமையல் குறிப்புகளில் நெய்யைப் பயன்படுத்துகிறோம். இருப்பினும், வெதுவெதுப்பான நீரில் நேரடியாக நெய்யைக் கலந்து உட்கொள்வதால் பல நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை என்னவென்று இங்கே பார்ப்போம். பொதுவாக, வெதுவெதுப்பான நீர் மற்றும் நெய் இரண்டும் தனித்தனியாக ஆரோக்கியத்திற்கு நல்லது. இருப்பினும், அவற்றை ஒன்றாக எடுத்துக்கொள்வது இரட்டிப்பு நன்மைகளை அளிக்கும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். […]
உத்தரகாண்டின் கோல்திர் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் மாயமாகி உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தின் கோல்திர் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து அல்கநந்தா ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், சுமார் 7 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். கர்வால் பிரிவு ஆணையர் வினய் சங்கர் பாண்டே […]
2026 தேர்தலில் விசிகவுக்கு அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் ஒதுக்கத் தயார் என இபிஎஸ் தூது விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகியான வைகை செல்வன் சந்தித்து கொண்டனர். அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கப்பட்டு 2 மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், இரு கட்சியின் நிர்வாகிகளும் தங்களது கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் என்று கூறி வருகின்றனர். […]
தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நீண்ட காலமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில், கடந்த 2016ல் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-அரசு பணிகளில் பதவி உயர்வுகளில் மொத்தமுள்ள பணியிடங்களில் 4 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு என […]
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.72,560க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் […]
இந்து மதத்தில், ‘ஓம்’ என்று உச்சரிப்பது ஆன்மீக ரீதியாகவும் மத ரீதியாகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது, சிறப்பு என்னவென்றால், அது ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் அற்புதம். ‘ஓம்’ என்று உச்சரிப்பது மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், இதயம், நுரையீரல் மற்றும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. அறிவியல் ஆராய்ச்சி மற்றும் நிபுணர்களின் கருத்துக்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஓம் என்பது விழிப்புணர்வின் ஒலி அல்லது ‘முதல் ஒலி’ என்றும் கருதப்படுகிறது. இயற்பியல் படைப்பு தோன்றுவதற்கு […]
நோ டவுன் பேமென்ட், V, மிஸ்ஸிங் இன் ஆக்ஷன் III ஆகிய படங்களில் சினிமா ரசிகர்களை மகிழ்வித்த நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளராக செயல்பட்ட பாலிவுட் பிரபலம் அகி அலியோங் வயது 90-ல் காலமானார். டிமென்ஷியா என்னும் நியாமக மறதி நோயால் பாதிக்கப்பட்ட அவர், ஜூன் 23ஆம் தேதி திங்கட்கிழமை, கலிபோர்னியாவின் சில்மரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். இந்த தகவலை அவரது 38 வயதான மனைவி கான்சிட்டா, உறுதிப்படுத்தினார். சிறுபான்மையினருக்காக […]
பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். சீனாவின் கிங்டாவோவில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும், SCO உறுப்பினர்கள் பயங்கரவாதத்தைக் […]

