நிலம் என்பது மனித நாகரிகத்தின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்த, மிகவும் பழமையான மற்றும் முக்கியமான வளங்களில் ஒன்றாகும். நிலம் என்பது சாதாரணமான மண் மட்டுமல்ல; அது அதைவிட அதிகம். அது வாழ்க்கையின் அடிப்படை, வாழ்வாதாரம், விவசாயம், குடியேற்றம், பண்பாடு, அடையாளம் மற்றும் உரிமையின் ஒரு உருவமாகவே நீண்ட காலமாக இருந்துவருகிறது. நிலம் என்பது விவசாயம், வீட்டுவசதி, தொழில், கல்வி மற்றும் மத வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கிறது. நிலத்தின் […]
காசா நகரை மையமாகக் கொண்டு தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதலில், ஹமாஸ் இயக்கத்தின் முக்கியமான முகமாகவும், ஆயுத பிரிவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்த அபு உபைதா, சுட்டுக்கொல்லப்பட்டதாக இஸ்ரேல் உள்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார். அவரது மரணத்தை உறுதிப்படுத்தும் வகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கருத்து வெளியிட்டுள்ளதுடன், அந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஹமாஸ் தரப்பில் […]
பஞ்சாங்க குறிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுவது தான் எமகண்ட காலம். தமிழர் வாழ்வில் சுப முகூர்த்த நேரங்கள் முக்கியம் என்பது போல, தவிர்க்க வேண்டிய நேரங்களும் பெரும் கவனத்துடன் கருதப்படுகின்றன. அதில் மிக முக்கியமானது தான் எமகண்டம். பகல்பொழுதின் ஒரு பகுதியான எமகண்டம், மரணத் தெய்வமான எமராஜனுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இந்த நேரம் முழுவதும், கேதுவின் தாக்கத்துடனும், எதிர்மறை சக்திகளின் ஆதிக்கத்துடனும் சூழப்பட்டதாக நம்பப்படுகிறது. ராகு காலம் போலவே, தினசரி ஒருமுறை […]
தமிழகத்தில் இன்று முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2025-26-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை தற்போது நிர்ணயித்து உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள சன்னரக நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,389 என்பதை ரூ.2,545-ஆகவும், பொதுரக நெல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,369 என்பதை ரூ.2,500-ஆகவும் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த விலையில் தமிழகம் முழுவதும் உள்ள நெல் […]
யூனிபைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பயன்பாட்டுக்கான முன் அனுமதிக்கப்பட்ட கடன் வரம்புகள் (pre-sanctioned credit lines) ஆகஸ்ட் 31 முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, பயனாளர்கள், நிலையான வைப்பு (Fixed Deposits), பங்கு (Shares), பத்திரங்கள் (Bonds) அல்லது ஓவர்டிராஃப்ட் கடன்கள் (Overdraft Loans) ஆகியவற்றைக் கொண்டு ஆதரிக்கப்படும் கடன் வரம்புகளைத் தங்களின் UPI செயலிகளில் இணைக்க முடியும். இது, பயனாளர்களுக்குப் பணம் செலுத்துவதில் கூடுதல் வசதியையும், பல்வேறு நிதி […]
மாத தொடக்க நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.51.50 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,738-க்கு விற்கப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் […]
மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் தமிழக அரசாங்கம், அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு, புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்படுகிறது. அது போலவே, மாணவர்களுக்காக மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்திற்கான அடுத்த […]
இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் மழைப்பொழிவு இயல்பை விட 109% அதிகமாக இருக்கும் என்றும் திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கனவே வெள்ளம், மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் என பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது பருவமழைக் காலத்தை குறிக்கிறது. இந்தநிலையில், செப்டம்பர் மாதத்தில் சராசரி அளவைவிட(167.9 மிமீ) 109 சதவீதத்திற்கும் […]
இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் […]
தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. தமிழகத்தில் உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 25 சுங்கச் சாவடிகளின் சுங்கக் கட்டணம் வரும் இன்று நள்ளிரவு முதல் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்படும் என்று செய்திகள் வெளியாகியது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே 82 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 78 சுங்கச் சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 40 […]

