ஓய்வூதியர் பணப்பலன் வழங்குவதற்காக ரூ.1,137 கோடியை போக்குவரத்துக் கழகங்களுக்கு தற்காலிக முன்பணமாக (கடன்) தமிழக அரசு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் சுன்சோங்கம் ஜடக்சிரு பிறப்பித்த உத்தரவில்: போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை முதல் நடப்பாண்டு ஜனவரி வரை ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பணிக்காலத்தில் மரணமடைந்தவர்களுக்கும் பணப்பலன் வழங்கும் வகையில் நிதியுதவி கோரி போக்குவரத்துத் துறைத் தலைவர் கடிதம் அனுப்பியிருந்தார். இதை பரிசீலித்த அரசு, […]
தமிழர்களின் பாரம்பரியத்தில், குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒரு குடும்பத்தின் வெற்றி, வளம், சுபிட்சம் ஆகிய அனைத்துக்கும் அடித்தளமாகக் கருதப்படும் குலதெய்வத்தின் அருளை, ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற எண்ணம் தொன்மை காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. சிலரால் தான் சொந்த ஊருக்குச் சென்று குலதெய்வத்தை வழிபட முடியும். வேறு ஊரில் வசிப்பவர்களுக்கு, குடும்ப சூழல், வேலை போன்ற காரணங்களால், குலதெய்வ தரிசனத்திற்கு இடையூறுகள் ஏற்படக்கூடும். இதற்கான […]
2025 ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய அணிகளுடன் இணைந்து இந்தியா குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ளது. பிராந்தியப் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் அறிவித்துள்ளார். முதல் முறையாக டி20 போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியல் விவரங்களை அறிந்துகொள்ளுங்கள். ஆசிய கோப்பை ‘டி-20’ கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (செப். 9-28) நடக்க உள்ளது. டி20 […]
எம்எட் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் நடப்பு கல்வியாண்டு (2025-26) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எம்எட் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி இன்று மாலை வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக உயர்கல்வித் […]
எஸ்.ஐ தேர்வில் இனி காவல் துறை இட ஒதுக்கீடு கிடையாது, அனைவருக்கும் ஒரே மாதிரியான எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 1,299 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மே 4-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதையடுத்து, சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். […]
திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி பணம் வாங்கிக் கொண்டு தான் கட்சி நடத்துவதாக காட்டிக் கொடுத்ததே திமுக தான் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தின் போது காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் மக்கள் மத்தியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட அனைத்து அதிமுகவின் திட்டங்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் […]
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மானு பாகர் இரண்டு வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. 10 மீ., ஏர் பிஸ்டல் அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியா சார்பில் மனு பாகர், சுருச்சி, பாலக் குலியா இடம் பெற்ற அணி பங்கேற்றது. மொத்தம் 1730 புள்ளி எடுத்து, வெண்கலம் வென்றது. […]
நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் அதிக எடையை எடுத்துச் செல்வது விமான நிலையங்களில் பின்பற்றப்படும் விதிகளைப் போலவே கடுமையான அபராதங்களையும் விதிக்க வழிவகுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி மற்றும் துர்கா பூஜையுடன் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், ரயிலில் பயணிக்கத் திட்டமிடும் பயணிகள் இந்திய ரயில்வேயின் கடுமையான லக்கேஜ் விதிமுறைகளைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ரயில்களில் பயணியர் எவ்வளவு எடையுள்ள பொருட்களை எடுத்துச் […]
ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாற்று கட்சியினர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவை மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் இந்த கூட்டணி அமைந்தது முதல் பெரும் […]
மேற்கு ஆப்கானிஸ்தானில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஈரானில் இருந்து இருந்து புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது அதிவேகமாக சென்ற பேருந்து, லாரி மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி கோர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த […]

