இன்றைய அதி நவீன டிஜிட்டல் யுகத்தில் இண்டர்நெட் நம் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் எங்காவது செல்ல வேண்டியிருக்கும் போது அல்லது எதை பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டுமெனில் உடனடியாக கூகுளை நாடுகிறோம். நமது ஸ்மார்ட்போன்களில் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பயன்பாடுகள் இணைய வசதியை அடிப்படையாகக் கொண்டவை. இந்தியா மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான நாடுகள் இண்டர்நெட்டை பயன்படுத்துகிறது. உலகம் முழுவதும் இண்டர்நெட் பயன்பாட்டில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. […]
போக்குவரத்து நெரிசலைத் தடுக்க பீக் ஹவர்களில் தாம்பரம் பகுதியில் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்தது. காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்; பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதையும் கருத்தில் கொண்டு, இன்று காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கீழ்க்கண்ட சாலைகளில் கனரக வாகனங்கள் […]
ஆகஸ்ட் 8, 1942 அன்று தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கியமான தருணமாகும். மகாத்மா காந்தி தலைமையில், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுக்கப்பட்டது. பாரத் சோடோ அந்தோலன் என்றும் அழைக்கப்படும் இந்த இயக்கம், இந்தியாவின் சுயராஜ்யக் கோரிக்கையை நிவர்த்தி செய்ய கிரிப்ஸ் மிஷன் தவறியதற்கான நேரடி பிரதிபலிப்பாகும். வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்பது மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் […]
75% பொது விநியோகத் திட்டப் பயனாளர்களுக்கு முகப்பதிவு அங்கீகாரம் வாயிலாக உணவு தானியங்கள் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு. நியாய விலைக் கடைகள் மூலம் உணவு தானியங்கள், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், நியாய விலைக்கடைகளில் பயனாளிகளின் முக அடையாள அங்கீகார நடைமுறை கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் கடவுகளின் அடிப்படையில் பயனாளிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட:டு […]
பிரதமரின் கர்ப்பிணி பெண்களுக்கான நலத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டு ஜூலை மாதம் வரை 4.05 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பேறுகால பயன்களைப் பெற்றுள்ளனர். இரண்டாம் கட்ட ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், 72.22 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை, குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், பழங்குடியின தாய்மார்கள் என அனைத்து மகளிரும் பயனடையும் வகையில் […]
கழிப்பறையில் நீண்ட அமர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும், அதையும் மீறி இப்பழக்கத்தை தொடர்ந்தால் ஆசனவாய்ப் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு ரத்த நாளங்கள் வீங்கி மூல நோய் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஸ்மார்ட் போன் வந்த பிறகு உலக அளவில் எண்ணற்ற விஷயங்களை நாம் எளிதாக தெரிந்து கொள்ளவும், கல்வி, வேலை, தொழில் என எக்கச்சக்கமான துறைகளுக்கு இணையதள தொழில்நுட்பம் மிகப்பெரிய […]
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்தில் இருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட தமிழகத்தில் […]
ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி வரும் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.128.43 கோடி ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கடந்த 05.11.2022 முதல் ஆவின் பால் கொள்முதல் விலை பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.32/-லிருந்து ரூ.35/-ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.41/-லிருந்து ரூ.44/- ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களிடையே கறவை […]
சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது, அது நம் இதயத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று சிறு வயதிலிருந்தே கேள்விப்பட்டு வருகிறோம். இதனால்தான் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் நுரையீரல், இதயம் அல்லது புற்றுநோய்க்கு மட்டுமே என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம். ஆனால் சமீபத்திய ஆய்வில் இது முதுகுத் தண்டுவடத்தையும் பாதிக்கிறது என்று தெரியவந்துள்ளது. நீண்ட நேரம் சிகரெட் பிடிப்பதால் டிஸ்க்குகள் விரைவாக தேய்மானம் அடைகின்றன, இது முதுகுவலி, நடப்பதில் […]
மனம், உடல், சமூக ரீதியான இடையூறுகளில் இருந்து பள்ளி மாணவிகளைப் பாதுகாக்கும் வகையில் மாநில அளவில் ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இன்று தொடங்கிவைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு, உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் […]

