இந்தியாவில் திகிலூட்டும், மர்ம இடங்கள் பல உள்ளன.. அந்த வகையில் இந்தியாவின் மிகவும் பயமுறுத்தும் இடம் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.. பல அமானுஷய் அமானுஷ்ய கதைகளால் நிரம்பிய ஒரு பாழடைந்த பங்களா தான் இது. சிலர் இதனை பேய் பங்களா என்றும், பிற இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இங்கு இருப்பதாகவும் கூறுகின்றனர். சேதமடைந்த சுவர்கள், உடைந்த ஜன்னல்கள் மற்றும் அதிகமாக வளர்ந்த தாவரங்கள் என இந்த பங்களா பார்ப்பதற்கே […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள TNPSC GROUP II & IIA முதல்நிலை தேர்வுக்கு நாமக்கல் மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசுப் […]
ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலம் வந்தவுடன், கொசுக்களின் அச்சுறுத்தல் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும், கொசுக்களால் பரவும் நோய்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். தேசிய தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது. உலக அளவில் சிக்குன்குனியாவின் அச்சுறுத்தல் தற்போது அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கையின்படி, உலகெங்கிலும் சுமார் ஐந்து பில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். […]
மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர்களின் உடல்நிலையை கவனிக்க 30 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெற்றோர்களை கவனிக்க அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க ஏதேனும் வழிமுறை உள்ளதா என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்; மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு, 20 நாட்கள் அரைச் சம்பள விடுப்பு, 8 நாட்கள் தற்செயல் […]
செஞ்சியில் நடைபெற்ற தவெக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாவட்ட செயலாளரை கண்டித்து கட்சி நிர்வாகிகள் திடீரென விஜய் படத்தை தூக்கி எறிந்து காலால் மிதித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுச்செயலாளர் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு அடுத்த மாதம் 25ஆம் தேதி மதுரையில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த மாநாட்டை […]
அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருக்கும் அவர்களுக்கு மத்திய மாநில அரசாங்கம் சார்பில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்: 1. […]
புதிய தேசிய கூட்டுறவு கொள்கையை வெளியிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, 50 கோடி குடிமக்களை செயலில் உள்ள கூட்டுறவு உறுப்பினர்களாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை (ஜூலை 25) புதிய தேசிய கூட்டுறவு கொள்கை 2025 ஐ வெளியிட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் 48 உறுப்பினர்களுடன் அனைத்து பங்குதாரர்களுடனும் பேசி இந்தக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் […]
நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ; வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில், மேற்கு வங்கம் – வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி இன்று […]
மாநில தகுதி தேர்வுக்கு சான்றிதழ் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. செட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்வழி ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை (மாதிரி படிவத்தில் உள்ளபடி) உரிய அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் […]
முதல்வர் மருந்தகங்களில் குழந்தைகளுக்கான மருந்துகள் மற்றும் தோல், புற்றுநோய் உள்ளிட்ட பல மருந்துகளுக்குகடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும் நோக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடியால் நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்ட மக்கள் மருந்தகத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி ‘முதல்வர் மருந்தகம்” என்ற பெயரில் தமிழகத்தில் திறந்தது திமுக அரசு. […]

