இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால், அவர்கள் மீது இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படலாம் என்று நேட்டோ தலைவர் மார்க் ரூட் எச்சரித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட்டர்களுடனான சந்திப்பின் போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கு புதிய ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், 50 நாட்களுக்குள் ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்ய ஏற்றுமதிகளை வாங்கும் நாடுகள் மீது 100% […]

கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கோவை […]

சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டப் படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீர்மிகு சட்டப் பள்ளியில் எல்எல்எம் படிப்புக்கு மொத்தம் 260 இடங்கள் வரை உள்ளது. சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் சென்னையில் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் எல்எல்எம் எனும் 2 ஆண்டு முதுநிலை சட்டப் படிப்புக் கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. […]

சுங்கக் கட்டணத்தை பாதியாக குறைக்க சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய நேடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சுங்கக்கட்டணம் பெரும் தலைவலியாக உள்ளது. நீண்ட தூர பயணங்களில் ஒவ்வொரு சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.. அவ்வப்போது அரசு இந்த சுங்கக்கட்டணங்களை உயர்த்தி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.. இந்த நிலையில் வாகன ஓட்டிகளுக்கு ஒரு குட்நியூஸ் வந்துள்ளது.. சுங்கக் கட்டணத்திலிருந்து நிவாரணம் அளிக்க […]

முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் என உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 15-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மாணவர்களின் நலன் கருதி கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று […]

காலை நடைப்பயிற்சி அல்லது வேறு எந்த உடற்பயிற்சி செய்த பிறகு பெரும்பாலும் தாகம் எடுக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், பலர் யோசிக்காமல் உடனடியாக தண்ணீர் குடிக்கிறார்கள். ஆனால் நடைப்பயிற்சி செய்த உடனேயே தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? உடற்பயிற்சி செய்த பிறகு தண்ணீர் குடிக்க சரியான நேரம் மற்றும் வழி இருக்கிறது என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. நாம் நடக்கும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது, நமது […]

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோகிராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட […]

சார்- பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உட்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. குரூப்-2 ஏ தேர்வுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சார்-பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், […]

தென் அமெரிக்க நாடான பெலிஸில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கி.பி 350 இல் கராகோலின் முதல் அறியப்பட்ட ஆட்சியாளரான தே காப் சாக்கின் கல்லறையை கானாவில் கண்டுபிடித்தனர். சுமார் 1,600 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய நகரத்திற்கு அடித்தளமிட்ட கராகோல் என்ற பண்டைய மாயன் நகரத்தில் முதல் ஆட்சியாளரின் அற்புதமான கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த ஆட்சியாளரின் பெயர் தே காப் சாக். பல தசாப்தங்களில் மிக முக்கியமான ஒன்றாகப் […]

மங்களகரமான தினமான இன்று பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோடக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். சுப முகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்று பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். தற்போது ஆனி மாதத்தில் வரும் மங்களகரமான நாட்களான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைள் வந்தன. அதன் […]