திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கக் கோரிய வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள புனித திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த பொதுநல மனுக்கள் வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். நீதிபதி நிஷா பானு மனுக்களில் எதிலும் தலையீடு தேவை இல்லை என கூறி அனைத்தையும் தள்ளுபடி செய்திருக்கிறார். […]
நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த 22-ம் தேதி தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார். ரசிகர்கள், நடிகர்கள், தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.. அந்த வகையில் சக நடிகையும், விஜய்யின் தோழியுமான த்ரிஷா கிருஷ்ணன் விஜய் உடன் இருக்கும் க்யூட்டான அன்சீன் போட்டோவை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். அந்த போட்டோவில், த்ரிஷாவின் வளர்ப்பு நாயான இஸியை, விஜய் தூக்கிப் பிடித்துள்ளார்.. விஜய்யை பார்த்து […]
கிரிக்கெட்டர் ரிங்கு சிங் – சமாஜ்வாடி எம்.பி ப்ரியா சரோஜா இருவருக்கும் நவம்பர் 19ல் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திருமணம் தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்டர்களில் ஒருவராக இருப்பவர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ரிங்கு சிங் (வயது 27). இந்திய அணிக்காக 33 சர்வதேச டி20 போட்டிகள், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் இந்தியாவின் இளம் எம்பியான சமாஜவாதி […]
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக இன்று அமெரிக்க அதிபர் அறிவித்தார்.. இதனால் 12 நாட்களுக்கு பின் மோதல் முடிவுக்கு வந்தது.. ஆனால் சிறிது நேரத்திலேயே போர் ஒப்பந்தத்தை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. மேலும் ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால் இஸ்ரேலின் இந்த கூற்றை ஈரான் மறுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் மோசமடைந்து வருகிறது. இந்த […]
ஜூன் 22 அன்று, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போரின் போது, அமெரிக்கா ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களான நிடாஞ்ச், இஸ்ஃபஹான் மற்றும் ஃபோர்டோவை B-2 குண்டுவீச்சு விமானங்களால் தாக்கியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, கத்தாரின் தலைநகரான தோஹாவில் உள்ள அமெரிக்க தளத்தை ஈரான் ஏவுகணைகளால் குறிவைத்தது. இருப்பினும், ஈரானிய ஏவுகணைகளால் அமெரிக்க தளம் அதிக சேதத்தை சந்திக்கவில்லை. ஆனால் மீண்டும் ஒருமுறை இரு நாடுகளுக்கும் இடையிலான விரோதம் […]
போதை பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீ காந்த் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவர் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். நடிகர் ஸ்ரீ காந்த் ஒரு கிராம் ரூ.12,000 என்ற விலையில் மொத்தம் ரூ.4 லட்சம் வரை பணப்பரிமாற்றம் […]
நடிகர் அஜித்தின் புதிய போட்டோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்.. இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் படத்தின் அறிவிப்பு வெளியானாலே அதனை அவரின் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.. நடிகர் அஜித் சினிமா மட்டுமின்றி கார், பைக் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.. இந்த […]
மத்திய அரசில் உள்ள லோவர் டிவிசன் கிளார்க்/ஜூனியர் செயலக உதவியாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் ஆகிய பதவிகளில் தேசிய அளவில் 3,131 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் துறையின் கீழ் உள்ள டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு 12-ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் கணிதம் பாடம் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்தியாவின் மூன்று பாதுகாப்புப் படைகளுக்கும் (ராணுவம், கடற்படை, விமானப்படை) அவசரகால கொள்முதலுக்காக 28 ஆயுத அமைப்புகளை வழங்கியுள்ளது. ராக்கெட்டுகள், ஏவுகணைகள், கையெறி குண்டுகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் இதில் அடங்கும். இந்த நடவடிக்கை, பாதுகாப்புத் துறையின் தன்னம்பிக்கை உந்துதல் (Aatmanirbhar Bharat) நோக்கில் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் […]
ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து. நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகள் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனிடையே ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் தற்போதைய மோதல் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று, ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக […]

