கிருஷ்ணகிரி மாவட்ட பாமக இளைஞர் அணி துணை செயலாளராக பதவி வகித்து வந்தவர் R.அசோகன். இவர் தற்போது பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் முன்னிலையில், R.அசோகன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்து கொண்டனர். அவர்களுக்குச் சால்வை மற்றும் இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிருப்தியில் பாமக நிர்வாகிகள் சமீக நாட்களாகவே பாமக நிறுவனர் ராமதாஸ், […]
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதத்தில் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை போல இந்த பக்ரீத் பண்டிகையும் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையாக விளங்குகின்றது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத், இன்று கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் பக்ரீத் அன்று பொது விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல், பல மாநிலங்களும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளன. இதனால் இன்று […]
சந்தையில் அரிசி, பருப்பு, கோதுமை ரகங்களின் விலை சீராக நீடிப்பதால், மலிவு விலை விற்பனைக்கான, ‘பாரத் பிராண்டு’ திட்டம் கைவிடப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 1.78% ஆகக் குறைந்துள்ளதால், பாரத் பிராண்ட் தயாரிப்புகளை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது . நடுத்தர வர்க்கத்தினருக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கடந்த 2023ஆம் ஆண்டு பாரத் பிராண்ட் […]
இந்தியாவின் வக்ஃப் சொத்து நிர்வாக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக உமீத் (UMEED) மைய போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவது மட்டுமின்றி சாமானிய முஸ்லீம்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும் என்று மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். டெல்லியில் உமீத் (UMEED) மைய போர்ட்டலை நேற்று தொடங்கிவைத்த அவர், இந்தப் போர்ட்டல் தொழில்நுட்ப மேன்மைப்படுத்தலைவிட கூடுதல் […]
தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற ஜூன் 24 ல் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருநங்கைகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கு திருநங்கை நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நல வாரியத்தின் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுய தொழில் துவங்க மானியத் தொகை கல்வி […]
தொகுதி மறுவரையறை தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது என முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்; மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது. மத்திய பா.ஜ.க. […]
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம்பெண்கள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக […]
உணவுப் பாதுகாப்பு என்பது உலக மக்கள் அனைவரையும் பாதிக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை. உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவினால் ஏற்படும் அபாயங்களைக் கண்டறிந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூன் 7ஆம் தேதி உலக உணவுப் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 2018 இல் நிறுவப்பட்டது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றால் […]
பெண்கள் மகாலட்சுமியின் அம்சம். பார்த்தாலே லட்சுமி கடாட்சமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். பின்னல் என்பது உறவைக் குறிக்கிறது. முடியை விரித்து விடுவது அமங்கலமானது. அதாவது முடி என்பது அழகான கூந்தல். அந்த கூந்தலை பின்னி பூ வைத்து பார்ப்பதன் அழகே தனி. ஆனால் இன்றைய சூழலில் பலரும் தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டுதான் அலைகின்றனர். தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும். தன்னை முன்னிறுத்தும் […]
சில நேரங்களில் நாம் கடந்து போகும் பொருட்களால் எதிர்மறையான சக்திகள் நம்மை தொடர வாய்ப்பு உள்ளது. இதனால் வீட்டில் கஷ்டம், துக்கம், கண்ணீருடன் கூடிய சில விடயங்கள் நடக்கலாம். ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, சாலையில் கிடக்கும் சில பொருட்களை எடுப்பது மங்களம் உண்டாகும் என எமது முன்னோர்கள் நம்புகிறார்கள். நம்பிக்கையின் படி, சாலையில் கிடக்கும் சில பொருட்களை நாம் கடக்கக்கூடாது. சாலையில் கிடக்கும் இந்தப் பொருட்களைக் கடப்பது வாழ்க்கையில் பிரச்சினைகளை உண்டுபண்ணும். […]

