பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் இராவணன் நீக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாமகவில் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை மருத்துவர் ராமதாஸ் நியமித்து வருகிறார். அந்தவகையில் தற்போது வடிவேல் இராவணன் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, முரளி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் […]

நீட் தேர்வில் 680 மதிப்பெண் எடுத்த கோயம்புத்தூர் மாணவி அபிஷியாவுக்கு குறைவான பர்சன்டேஜ் வழங்கப்பட்டது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு தேசிய அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். தமிழ்நாடு தொடர்ச்சியாக எதிர்த்து வந்தாலும், நீட் தேர்வு கட்டாயம் என்பதில் மத்திய அரசு தீவிரமான நிலைப்பாடு கொண்டுள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு போராடி வருகிறது. இந்த […]

இஸ்ரேஸ் தாக்குதல்களால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிடங்கு பற்றி எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே தற்போது போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மத்திய கிழக்கு நாடுகளும் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இஸ்ரேலிய ஆயுதப் படைகள் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற திட்டத்தின் கீழ் ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரான் தலைநகர் […]

திண்டுக்கல் மாவட்ட திமுக மூத்த நிர்வாகி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன. அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 2026 ம் ஆண்டு தேர்தலுக்கு தற்போதே களப்பணிகளை தொடங்க வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் சரிவர பணி செய்யாத மாவட்ட நிர்வாகிகள் உட்பட நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் எனவும் […]

கருட புராணத்தில், இறந்தவர் பயன்படுத்திய தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க பொருட்கள் குறித்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.  பூமியில் பிறந்த ஒவ்வொரு நபரும் ஒரு நாள் இறந்துவிடுவார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இருப்பினும்.. நம் வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினர் இறந்தால்.. அவர்களின் விலைமதிப்பற்ற பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். சிலர் அவற்றை நினைவுப் பொருளாக வைத்திருக்கிறார்கள், மற்றவர்கள் அவற்றை அணிகிறார்கள். இருப்பினும்.. […]

உத்தரகாண்டில் டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுண்ட் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த ஹெலிகாப்டரில் 7 பேர் பயணித்த நிலையில், 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சார் தம் என்று சொல்லப்படும் கேதர்நாத் யாத்திரையின் 4 புனித தலங்களில் ஒன்றுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் அதிகாலையில் புறப்பட்ட நிலையில், குழந்தை உட்பட 6 பேர் பயணித்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் கவுரிகுண்ட் […]

கற்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் முதலியவற்றிற்கு உரிய போக்குவரத்து அனுமதிச்சீட்டு பெற்று எடுத்துச்செல்ல வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள குவாரிகளிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கனிமங்களை வரன்முறைப்படுத்துவதற்கு ஏதுவாக இணையவழியில் Bulk permit வழங்கும் நடைமுறை ஜூன்-2024 முதலும் மற்றும் e-permit வழங்கும் நடைமுறை ஏப்ரல்-2025 முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு இருப்பு கிடங்கு விதிகள், 2011-ன்படி கனிமங்களை இருப்பு வைத்து வியாபாரம் […]

நடப்பு கல்வியாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை நியமிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 2023-24, 2024-25 ஆம் கல்வியாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை நியமிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களின் பெயர்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். […]

அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில், ஜூன் 23, 24-ல் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டங்கள் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தை பள்ளிக்கல்வித்துறை நடத்தி வருகிறது. அதன்படி பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் தொடர்பாக துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் […]

மாரடைப்பு ஆபத்தானது. ஆனால் ஒருவருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அல்லது முதலுதவி கிடைத்தால், அவரது உயிரைக் காப்பாற்ற முடியும். மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை தெரிந்துகொள்வோம். மாரடைப்பு எப்படி ஏற்படுகிறது? இன்றைய காலகட்டத்தில், மாரடைப்பால் ஏற்படும் இறப்புகள் மிகவும் அதிகரித்துள்ளன. இதற்கு உடனடி சிகிச்சை கிடைக்காததும் கூட காரணமாக அமைகின்றன. பல நேரங்களில் ஒருவர் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே இறந்துவிடுகிறார். அதேசமயம் […]