தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதி முடிகிறது. இதையடுத்து, புதிய எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாள் மாலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதில், திமுக 4 மற்றும் அதிமுக இரண்டு இடங்களை இந்த தேர்தலில் பெறும். தமிழ்நாட்டில் பாமகவின் அன்புமணி ராமதாஸ், தொமுச சண்முகம், சந்திரதேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகியோர் மாநிலங்களவை எம்பிக்களாக உள்ளனர். […]
தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தவறான தகவல் பரவி வருகிறது. தனியார் பேருந்து உரிமையாளர்கள், பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதுகுறித்து மக்கள் கருத்து கேட்டு, அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த […]
தெற்காசியாவில் கிட்டத்தட்ட 1.8 பில்லியன் மக்கள் 2030 ஆம் ஆண்டுக்குள் கடுமையான வெப்ப அபாயங்களை எதிர்கொள்வார்கள் என்று உலக வங்கி அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. “ஆபத்திலிருந்து மீள்தன்மை வரை: தெற்காசியாவில் மக்கள் மற்றும் நிறுவனங்கள் தகவமைப்புக்கு உதவுதல்” என்ற தலைப்பிலான அறிக்கையின்படி, வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்களில் தெற்காசியா மிகவும் காலநிலை பாதிப்புக்குள்ளான பகுதியாகும். 2030 ஆம் ஆண்டு வாக்கில், தெற்காசிய மக்கள் தொகையில் சுமார் 89% […]
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும், விடுப்பட்டவர்களை இணைக்கும் நோக்கில் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 1.14 கோடி பேர் பயனடைந்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க உள்ளது. தமிழ்நாடு அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி, மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் […]
தமிழக பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து, மாநில அரசுக்கு மாற்றம் செய்து, சட்டத்தில் திருத்தம் செய்து, 10 சட்ட மசோதாக்கள், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசாங்கம் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு […]
ஜூன் 15 ஆம் தேதி நீட் முதுகலை தேர்வை நடத்துவது சாத்தியமில்லை என்று தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மருத்துவத்தில் முதுகலை படிப்புகளில் சேருவதற்கான இந்தத் தேர்வை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் வாரியம் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளது. முன்னதாக ஜூன் 15 ஆம் தேதி இரண்டு ஷிப்டுகளாக நீட் முதுகலை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் மே 30 […]
ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி நேன்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே அகமதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக பிலிப்ஸ் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். சால்ட் […]
ஆபரேஷன் சிந்தூர் பெயரை வைத்து வாக்குகளை பெற பாஜக திட்டமிட்டுள்ளது என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் குற்றம்சாட்டி உள்ளார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் […]
1946ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கொனேட்டம்பட்டுவில் பிறந்தவர் எஸ்பிபி. எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்பிபி என்றும், பாலு என்றும் மக்களிடையே பிரபலமான அவரின் முழுப்பெயர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் ஆகும். அவரது பெற்றோர் பெயர் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா. சிறு வயது முதலே இசையுடன் வளர்ந்தார் எஸ்பிபி. பொது நிகழ்ச்சிகளிலும் பாடி பரிச்சயம் பெற்றார். முறையான சாஸ்திரீய சங்கீதம் கற்கவில்லை என்றாலும் […]
சாமி கும்பிடும்போது சிலருக்குக் கொட்டாவி வருவதையும், கண்ணீர் வருவதையும் பார்த்திருப்போம். சில சமயங்களில் சாமி சிலையிலிருந்து பூ விழுவது, மணியோசை கேட்பது போன்ற விஷயங்களும் நடைபெறும். இதற்கான பலன்கள் என்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம். கோயிலுக்குச் செல்வதற்கான முக்கியமான காரணம், நம் குறைகளை கடவுளிடம் சொல்லவும், நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறினால், அதற்கான பரிகாரத்தைச் செய்யவுமே செல்வோம். இன்னும் சிலர் மனநிம்மதி தேடி கோயிலுக்குச் செல்லும் வழக்கம் உண்டு. அவ்வாறு கோயிலில் […]

