தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு, கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ஆம் தேதி இப்படி, பணியில் இருந்தவர்கள் கடந்த நிதி ஆண்டில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்ந்து […]
ஏடிஎம்மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 கட்டணமாக பிடிக்கப்படும் என்று தகவல் வெளியாகி வருவதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கி கணக்கு வைத்துள்ள அனைவரிடமும் பணத்தை எடுப்பதற்கு கட்டாயம் ஏடிஎம் கார்டு இருக்கும். வங்கிக்கு நேரடியாக சென்று அலையாமல் தேவைப்படும்போது ஏடிஎம்களில் எளிதில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகளும் உள்ளன. […]
பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையில் ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் அரங்கேறியிருக்கிறது. ரவுடியின் தலையை தனியாக துண்டித்து அதை ஒரு இடத்திலும், உடலை வேறு இடத்திலும் வீசிவிட்டு கொலையாளிகள் சென்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள செங்கமடை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (36). இவர் மீது ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், […]
கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 14 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், […]
பிரபல மலையாள நடிகர் காரியவட்டம் சசிகுமார் காலமானார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகர் காரியவட்டம் சசிகுமார் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகரின் மறைவை அவருடன் பல ஆண்டுகளாக பணியாற்றிய தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 1989 ஆம் ஆண்டு க்ரைம் பிராஞ்ச் திரைப்படத்தில் அறிமுகமான சசிகுமார் மிமிக்ஸ் அணிவகுப்பு, […]
பனை மரம் ஏற கருவி கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நமது மாநில மரமான பனை மரத்தின் சாகுபடியை ஊக்குவித்து, பனை மரங்களை நம்பி வாழும் வேளாண் பெருமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2021-22 ஆம் ஆண்டில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ்,76 இலட்சம் பனை விதைகளும், ஒரு இலட்சம் பனங்கன்றுகளும் […]
ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்த 39 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது அறிவிப்பில்; பாலிடெக்னிக் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்த 4 பேரின் விண்ணப்பங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புகைப்படம், கையெழுத்து சரியாக இல்லாத 12 பேரின் விண்ணப்பமும், தேர்வர்களின் பெயர்களை சரியாக பூர்த்திச் செய்யாத 23 பேர் என 39 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு […]
பதிவுத் துறை அதிக ஆவணங்களை பதிவு செய்ய இடமளிக்க துணைப் பதிவாளர் அலுவலகங்களில் தட்கல் டோக்கன் முறையை தமிழக அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது. துணைப் பதிவாளர் அலுவலகங்களில் தினசரி வழங்கப்படும் வழக்கமான டோக்கன்களுக்கு கூடுதலாக தத்கலில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய டோக்கன் ஸ்லாட் முறையில், அதிக எண்ணிக்கையிலான துணைப் பதிவாளர் அலுவலகங்களில் 200 டோக்கன்களும், பிற துணைப் பதிவாளர் அலுவலகங்களில் 100 டோக்கன்களும் வழங்கப்படுகின்றன. பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் […]
TNPSC எழுத்துத் தேர்வு நிர்வாகக் காரணங்களால் தற்போது சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டு பணியில் அடங்கிய சமூக அலுவலர் பதவிகளுக்கான கம்ப்யூட்டர் வழித் தேர்வு நவம்பர் 12, 13 […]
அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற சரிவிகித உணவு உண்ண வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் சரிவிகித உணவு உட்கொண்டால் தான் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும். இருப்பினும், உணவை பொருத்தமட்டில் எதை உண்ணலாம் எதை தவிர்க்கவேண்டும் என்ற சந்தேகம் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுவது வழக்கம். போதுமான ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ள தவறினால் சிசுவிற்கு பிறவி குறைபாடுகள் ஏற்படக்கூடும். குழந்தைகள் எடை குறைவாக பிறப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய காரணமாகும். எடை […]