தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]
சட்டத்தை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் காணொலி மூலம் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், ”மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது ஒரு மகிழ்ச்சி இருக்கும். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அப்படி எனக்கு இல்லை. போதைப் […]
வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரத்தில் அடி பம்போடு சேர்த்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் வேலையாட்களை அனுப்பி அடி பம்பை அகற்றி விட்டு அந்த இடத்தில் கால்வாய் அமைக்கும் வேலைகள் நடந்து வருகிறது. பைக், ஜீப் போன்றவற்றை சேர்த்து சிமெண்ட் சாலை போடப்பட்டதை தொடர்ந்து, அடிபம் போடு சேர்த்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது, வேலூர் மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பணியை செய்த ஒப்பந்ததாரரின், ஒப்பந்தம் ரத்து […]
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், நேற்று கோத்தகிரி அருகே உள்ள டானிங்டன் பகுதிக்கு மது போதையில் வந்த உள்ளூர் வாசி ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது கொடநாடு சாலையில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலை மழையில் நனைந்து கொண்டிருப்பதை பார்த்ததும். உடனே, சிலைக்கு அருகில் சென்ற அந்த போதை ஆசாமி, கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே சென்று சிலை அமைக்கப்பட்டுள்ள தூண் […]
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே இருக்கும் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில், 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஆசிரியராக ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அடுத்த மாதம் ஓய்வு பெற இருக்கிறார். இந்த நிலையில், பள்ளியில் படித்து வரும் மாணவர்களிடம் வகுப்புஎடுக்கும் போது, இது தான் காதலிக்கும் வயது. இந்த வயதில் காதலிக்காமல் எந்த வயதில் காதலிப்பது என்றும், அதுபோல் சக மாணவிகளுக்கு, மாணவர்களை லவ் லெட்டர் கொடுக்க சொல்லி கூறியுள்ளார். […]
கர்நாடகாவில் இரு சமுகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்தனர்.. கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஹுலிஹைடர் கிராமத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.. தகவலறிந்த காவல்துறையின் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து இதையடுத்து உள்ளூர் நிர்வாகம் அப்பகுதியில் 144 தடை விதித்துள்ளது. காவல்துறையினர் மோதலுக்கான காரணம் விசாரணை நடத்தி […]
அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கில், 2015ல் தொடங்கப்பட்ட அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வருமான வரி செலுத்துவோர் அடல் பென்ஷன் யோஜனாவுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டாம் என்று நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.. இந்த புதிய உத்தரவு 2022 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. மத்திய நிதி அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ வருமான வரிச் […]
பாஸ்போர்ட் என்பது ஒரு முக்கியமான அடையாளச் சான்று ஆவணமாகும், இது பல வேலை தொடர்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்ற ஆவணங்களைப் போலவே, பாஸ்போர்ட்டும் அதன் காலாவதி தேதிக்கு முன்னதாக புதுப்பிக்கப்பட வேண்டும். உங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சில நிமிடங்களில் உங்களின் அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். ஒருவர் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பப் படிவத்துடன் கூடுதலாக பல ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு, பாஸ்போர்ட் சேவா கேந்திரா […]
பசு கடத்தல் வழக்கில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் அனுப்ரதா மண்டல் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். பார்த்தா சாட்டர்ஜியின் சர்ச்சைக்குரிய கைதுக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அனுப்ரதா மண்டலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பசுக் கடத்தல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் அனுப்ரதா மண்டல் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பசுக்கடத்தல் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு அனுப்ரதாவுக்கு சிபிஐ அதிகாரிகள் பல முறை சம்மன் அனுப்பி உள்ளனர்.. […]
கடன் செயலிகளுக்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறுகையில், “கடன் வழங்குதல் மற்றும் திருப்பிச் செலுத்துதல் போன்ற செயல்பாடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும், கடன் வாங்கியவரின் வங்கிக் கணக்கிற்கும் இடையில் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும். இதில், கடன் சேவை வழங்குநர் அல்லது 3ஆம் தரப்பினர் கணக்குகளின் வழியாக செயல்படுத்தக் கூடாது. டிஜிட்டல் கடன் வழங்குநருக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை வங்கிகள் போன்ற ஒழுங்குமுறைக்கு உட்பட்ட […]