பெற்றோரால் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட இளம்பெண் கணவனை விட்டுவிட்டு காதலனை திருமணம் செய்துகொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜான்சிராணி (18) என்பவர் கண்டாச்சிபுரம் அருகே பழைய கருவாட்சி கிராமத்தைச் சேர்ந்த ஞானமுத்து (22) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், 18 வயதான ஜான்சிராணிக்கு கடந்த ஆண்டு அவரது உறவினரான கிளிண்டன் என்பவரை பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். […]

ஜம்முகாஷ்மீரில் இரு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட இரண்டு பேருந்துகளில் 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் வர உள்ளார். இந்நிலையில் உதம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டொமைன் சொயில் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பஸ்ஸில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்ததில் நடத்துனரும் அவருடைய […]

’’இங்க ஒண்ணும் தேறாது, அடுத்த தடவ வயசான ஆளா பாரு’’ என்ற குறுந்தகவலை வைத்து மனைவியின் தில்லுமுல்லை ரகசியமாக கண்டுபிடித்து போலீசில் கூண்டோடு பிடித்துக்கொடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே தாசப்பகவுண்டன் புதூரைச் சேர்ந்த செல்வராஜ் – கண்ணம்மாள் தம்பதி , இவர்களுக்கு சரவணன் (35) என்ற மகன் இருக்கின்றார். கைத்தறி நெசவாளரான இவருக்கு பெற்றோர்கள் சம்மதப்படி புரோக்கர் ஒருவர் மூலம் தஞ்சாவூரின் அய்யம்பேட்டையைச் சேர்ந்த சரிதா என்ற பெண்ணின் […]

அமெரிக்காவில் ஒருவர் வாங்கிய 200 லாட்டரி சீட்டுகளிலும் ஜாக்பாட் அடித்து ரூ.8 கோடியை வென்றுள்ளார். அமெரிக்காவின் வர்ஜீனா நகரில் உள்ள அலெக்சாண்டிரியா பகுதியைச் சேர்ந்தவர் அலிகெமி. இவர் வர்ஜீனியாவின் லாட்டரி டிக்கெட்டுக்களை வாங்கினார். 200 லாட்டரிடிக்கெட்டுகளை வாங்க நினைத்த அவர் ஒவ்வொன்றையும் தனது பிறந்த மாதம் மற்றும் தேதி ஆகியவற்றை வைத்து லாட்டரிகளை தேர்வு செய்தார். மேலும் மாதங்களின் எண்களின் கூட்டுத்தொகை பிறந்த மாதமாக வரும். 0-2-6-5 என்ற கலவையை […]

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அக்டோபர் 2-ஆம் தேதி நடக்க இருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. சட்டம் – ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து, மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக்க திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்த தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கின்றேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை […]

யுபிஎஸ்சி தேர்வு தொடர்பான அப்டேட்டுகளை மொபைல் வழியாகவே இனி உடனுக்குடன் பார்த்துக் கொள்ளும் வகையில், புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் […]

மஹாராஷ்டிரா மாநிலத்தில் காதலித்து வந்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவின் பல்கர் மாவட்டத்தில் வசித்துவந்தவர்கள் ஸ்ரீகிருஷ்ணா யாதவ் (26). மற்றும் நேஹா (21) . பெண்ணின் சொந்த ஊர் பீகார் மாநிலம் என கூறப்படுகின்றது. இளைஞரின் சொந்த ஊர் உத்தரபிரதேசம் . இவர்கள் இருவரும் பல்கரில் வசித்து வந்துள்ளனர். நேற்று மாலை இளம்பெண் நேஹா அவ்வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது […]

மகளிருக்கான உரிமைத் தொகை ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால், திமுக அரசு அமைந்து ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது வரை அதுகுறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இந்த வாக்குறுதி குறித்து அதிமுக, பாஜக, […]

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் இடங்களில் நாடு முழுவதும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதை கண்டித்து கடந்த 23-ஆம் தேதி கேரளாவில் அந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. போராட்டத்தின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தப்பட்டது. மாநிலத்தில் முழு அடைப்புக்கு தடை விதித்து இருந்த நிலையில், இந்த போராட்டத்தை வழக்காக பதிவு செய்து உயர் […]

ஓய்வூதியம் தொடர்பான வழக்கில் நேரத்தை தமிழக அரசு வீணக்கின்றது என கூறி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். போக்குவரத்து துறையில் பணியாற்றியவர் வேணுகோபால்.இவர் கடந்த 1995ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில் பல்வேறு காரணங்களைக் காட்டி ஓய்வூதியத்தை அவருக்கு போக்குவரத்து துறை வழங்கவில்லை. இதனால் தொழிலாளர் ஆணையத்தில் முறையிட தொடங்கி , உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டு அந்த உரிமையை பெற்றார். ஆனால் கடந்த 2009ம் […]