இன்றைய நவீன உலகில் வேலைப்பளு மற்றும் சமூக வலைதளங்களின் மோகத்தால் பலரும் நள்ளிரவு வரை விழித்திருந்துவிட்டு, அதிகாலையில் தாமதமாக எழுவதை ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளனர். ஆனால், இத்தகைய பழக்கம் உங்கள் உயிருக்கே உலை வைக்கும் ஒரு காரணியாக மாறக்கூடும் என்று மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கணக்கின்படி, ஆண்டுதோறும் சுமார் 2 கோடி மக்கள் இதய நோய்களால் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலான மரணங்களுக்கு மாரடைப்பு மற்றும் […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட், நாட்டின் நிதி நிலைமை குறித்த முக்கியத் தரவுகளைப் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்த நிதியாண்டில் நிலவும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய அரசு சுமார் 17.2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குப் புதிய கடன்களைப் பெற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய அரசின் ஒட்டுமொத்தக் கடன் சுமை 200 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாகப் […]

தங்கம் என்பது காலங்காலமாக செல்வ செழிப்பின் அடையாளமாகவும், சிறந்த முதலீடாகவும் மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், நம் முன்னோர்கள் தங்கத்தை வெறும் ஆபரணமாக மட்டும் பார்க்காமல், அதனை ஒரு மருத்துவக் காரணியாகவும் கையாண்டுள்ளனர் என்பது பலரும் அறியாத உண்மை. நவீன மருத்துவ உலகம் வியக்கும் வகையில், தங்கம் நமது உடல் நலனில் ஏற்படுத்தும் ஆச்சரியமான மாற்றங்கள் குறித்து இங்கே காண்போம். இயற்கையான நச்சு நீக்கி மற்றும் சருமப் பாதுகாப்பு : […]

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.. ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.7,611 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்தார்.. தமிழகத்திற்கு 2 புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி அறிவித்துள்ளார்.. தொடர்ந்து பேசிய அவர் “ சென்னை – […]

மும்பை நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான ‘ராயல் பிரியாணி ஹவுஸ்’ உணவகத்தில் அரங்கேறிய கொடூரமான கொலை சதித் திட்டம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக உணவகத்தை நடத்தி வந்த ரமேஷ் படேல் (42) என்பவரை, அவரது மனைவியும் கள்ளக்காதலனும் இணைந்து 3 முறை கொலை செய்ய முயன்ற திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளன. ரமேஷ் படேலின் மனைவி பிரியா (35), […]

வங்கதேசத்தில் உள்ளூர் நீதிமன்றம் ஒன்று, அரசாங்க வீட்டுவசதித் திட்டத்தில் நில ஒதுக்கீடுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான இரண்டு தனித்தனி ஊழல் வழக்குகளில், நாடு கடத்தப்பட்ட பிரதமரான ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. டாக்கா சிறப்பு நீதிபதி நீதிமன்றம்-4-இன் நீதிபதி ரபியுல் ஆலம் இந்தத் தீர்ப்புகளை வழங்கினார்; ஒவ்வொரு வழக்கிலும் ஐந்து ஆண்டுகள் என மொத்தம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை ஹசீனாவுக்கு விதிக்கப்பட்டது என்று […]

நாடு முழுவதும் காலியாக உள்ள 22,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) தற்போது வெளியிட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் சூழலில், தற்போது நிலை 1-ன் கீழ் (Level 1) மொத்தம் 22,195 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,036 பணியிடங்கள் […]

நாகை மாவட்ட திமுகவில் நீண்டகாலமாக சிறுபான்மையினரின் குரலாக ஒலித்து வந்த முக்கியத் தலைவர் ஜி.எஸ்.பி. அலிசாஹிப், இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ந்தது. மறைந்த இசை முரசு நாகூர் ஹனிபாவுக்கு மிகவும் நெருக்கமானவரான அலிசாஹிப், நாகை மாவட்ட திமுக சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தவர். திமுக நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று நாகூர் ஹனிபாவுடன் சிறை சென்றுள்ளார். […]

தவெக கூட்டங்களில் திமுகவை மட்டுமே விமர்சித்து வந்த விஜய் தற்போது அதிமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளார்.. சில நாட்களுக்கு முன் நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் அதிமுகவை ஊழல் சக்தி என்றும் பாஜகவின் அடிமை என்றும் விமர்சித்தார்.. விஜய்யின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. எனவே அதிமுகவும் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கியது.. விஜய்யை பனையூர் பண்ணையார் என்றும், விஜய் பேசுவதெல்லாம் குப்பை […]

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், 50-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐய்யர் மலையிலிருந்து குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும், எதிரே வந்த மற்றொரு தனியார் பேருந்தும் எதிர்பாராதவிதமாக அதிவேகத்தில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதிகளும் உருக்குலைந்து பலத்த சேதமடைந்தன. பேருந்திற்குள் இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கித் […]