நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. தேசிய தலைநகரில் குடியரசு தின கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க இந்தியா கேட் அருகே உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு சேவைகள் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண்ணான சேலத்தில் அக்கட்சிக்கு தர்மசங்கடமான சூழல் உருவாகியுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் சேலத்தில், அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் அதிரடியாக ஆளுங்கட்சியான திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான மாதேஸ்வரன் (2011-2016), சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்பி முன்னிலையில் […]

அமெரிக்காவின் கிழக்குப் பகுதியின் மூன்றில் இரண்டு பங்கை ஒரு பெரும் பனிப்புயல் சூழ்ந்துள்ளது. இது நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை சுமார் 2,000 மைல் பரப்பளவில் கனமழை, உறைபனி, பனி குவிப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான குளிரை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 213 மில்லியன் மக்களைப் பாதித்துள்ள இந்தப் புயல் காரணமாக, 8,50,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படுள்ளது.. 14,000-க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் […]

ராஜஸ்தானின் நாகூரில் ஒரு 58 வயது நபரின் வீட்டிலிருந்து 9,550 கிலோ அம்மோனியம் நைட்ரேட்டை பறிமுதல் செய்ததையடுத்து, அவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. நாகூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) மிருதுல் கச்வா இதுகுறித்து பேசிய போது “ எங்களுக்கு கிடைத்த சில ரகசியத் தகவல்களின் அடிப்படையில், நாகூர் காவல்துறையின் ஒரு சிறப்புப் படை, ஞாயிற்றுக்கிழமை நாகூரின் தான்வ்லாவில் உள்ள குற்றவாளி சுலைமான் கானின் வீட்டில் சோதனை […]

ஒடிசாவின் கட்டக் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அரசு கல்லூரி ஒன்றில் பயிலும் ஸ்நேஹா பட்நாயக் (22) என்ற மாணவியின் விவகாரம், தற்பொழுது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஓராண்டிற்கும் மேலாக தனது கல்லூரி பேராசிரியரான டாக்டர் விக்ரம் மிஸ்ராவுடன் ஸ்நேஹா ரகசியத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். திருமணமான விக்ரம், ஸ்நேஹா கர்ப்பமான செய்தியை அறிந்ததும் அவரை திருமணம் செய்ய மறுத்து ஒதுங்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட அச்சமும் அவமானமும், […]

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது என்பது நாம் அறிந்ததே. பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொடியேற்றுவதும், இனிப்புகள் வழங்குவதும் வழக்கம். ஆனால், இப்போது குடியரசு தினத்தைப் பற்றி பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.. ஜனவரி 26 என்பது ஏதேனும் ஒரு தற்செயலான தேதி அல்ல. 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் “முழுமையான சுயராஜ்யம்” அதாவது […]

இன்றைய அவசர உலகில் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது என்பது ஒரு சவாலான காரியமாகிவிட்டது. மாறிவரும் வாழ்க்கை முறை, பணிச்சுமை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, பலரும் முறையான தூக்கத்தையும் சத்தான உணவையும் இழந்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் நாம் உட்கொள்ளும் உணவு நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், பலரும் நள்ளிரவு வரை கண் விழிப்பதோடு, அந்த நேரத்தில் கண்ட உணவுகளைச் சாப்பிட்டு உடல் […]

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற மாநில மற்றும் மாவட்ட அளவிலான செயல் வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையிலேயே அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறின. குறிப்பாக, கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ‘விசில்’ சின்னத்தைக் கையாள்வது தொடர்பாக மூத்த நிர்வாகிகளிடையே ஏற்பட்ட […]

சந்தைக்கு சென்றால் வாரம் முழுமைக்கும் தேவையான காய்கறிகளையும் பழங்களையும் மொத்தமாக வாங்கி வந்து குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) அடைத்து வைப்பது நம்மில் பலரது வழக்கமாகிவிட்டது. கோடைக்காலம் மட்டுமின்றி, கடும் குளிர் நிலவும் காலங்களிலும் ‘ஃப்ரெஷ்’ ஆக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்தையும் பெட்டிக்குள் வைக்கிறோம். ஆனால், குளிர்காலத்தில் சில குறிப்பிட்ட காய்கறிகளைப் பிரிட்ஜில் வைப்பது அவற்றின் தன்மையை மாற்றி, ஆரோக்கியத்திற்குப் பெரும் உலையை வைக்கும் என சுகாதார நிபுணர்கள் […]