fbpx

ஓசூர் பெரிய நகரத்தில் தொழிலாளியாக வசித்து வருபவர் எல்லப்பா. இவரது 17 வயது மகன் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். சிறுவனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ண ரெட்டி மனைவி அர்ச்சனா (27) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் இறுதியில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு, கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு, அந்த சிறுவனுடன் அர்ச்சனா பெங்களூரு சென்றார்.  இருவரும் […]

கடந்த ஜனவரி 18ம் தேதி திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளப்பந்தல் ஏரிக்கரை பகுதியில் மனித எலும்புக்கூடுகள் தனித்தனியாக சிதறி கிடந்தன. இதனை பார்த்த கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.  தகவலின் பேரில் போலீசார் எலும்புக்கூடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதே சமயம், திருக்கழுக்குன்றம் மாட்டுலாங்குப்பத்தைச் சேர்ந்த சந்திரன் (45) என்பவர் கள்ளத்தொடர்பு பிரச்சினையில் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது: சாலவாக்கம், மெய்யூர் பகுதியைச் சேர்ந்த […]

கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் உள்ள கல்வராயன் மலையை அடுத்த ஆவனூர் கிராமத்தில் வசிப்பவர் விவசாயியான பாக்யராஜ் எனபவர். இவரின் மனைவி மல்லிகா நிறை மாத கர்ப்பிணியான மல்லிகாவுக்கு கடந்த வியாழக்கிழமை மாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து, அவரை சேராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அந்த சமயத்தில் அங்கு மருத்துவர்கள் பணியில் இல்லாததால் செவிலியர்கள் பிரசவம் பார்த்தாக கூறப்படுகிறது.  பிறந்த குழந்தையானது சிறிது நேரத்திலேயே மூச்சுத்திணறல் […]

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வேலூர் மாதா கோயில் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (27). இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் தனது உறவினர் ஒருவரை திருமணம் செய்ய நிச்சயமாகியுள்ளது. இதையடுத்து இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.  அப்போது லவ் டுடே படம் குறித்தும் பேசினார்கள். இதையடுத்து, இருவரும் செல்போனை மாற்றிக் கொள்ளலாமா என்று அரவிந்த் கேட்டுள்ளார். அதன்படி இருவரும் 2 வார காலம் செல்போனை பரிமாறிக்கொண்டுள்ளனர். […]

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள குலசேகரத்தின் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த நிலையில் கல்லூரியின் அருகே பர்தா அணிந்துகொண்டு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் சுற்றி வந்துள்ளார். இதனை, கல்லூரி காவலாளிகள் பார்த்துள்ளனர்.  அந்த நபரை பிடித்து பர்தாவை விலக்கி பார்த்துள்ளனர். அப்போது, இளைஞர் ஒருவர் பர்தா வேடமணிந்து வந்தது தெரியவந்துள்ளது.  இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் […]

இந்திய ராணுவத்தில் பட்டதாரிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம். சென்னை Officers Training Academy (OTA) காலியாக உள்ள 61th Short Service Commission (Tech) Men (Oct 2023) and 32st Short Service Commision (Tech) Women Course (Oct 2023) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 191 […]

பராமரிப்பு பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 285 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 285 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, இன்று காலை புறப்பட வேண்டிய 285 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயனரின் […]

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களில் பங்கேற்கும் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கட்டணம் விளம்பரம் வெளியிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோஹித் குமார் சிங், வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் பாரம்பரியமான அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள் தவிர டிஜிட்டல் ஊடகங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளன. டிஜிட்டல் ஊடகங்களில் விளம்பரங்கள் முறைப்படுத்தப்படவில்லை. முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் வரும் […]

ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.. ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு […]

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பை முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளது.. ஆனால் அதே நேரத்தில் அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவும் […]