டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பழைய தலைமுறை சியெரா காரை புதிய தோற்றத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. 1990-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புகழ்பெற்ற எஸ்யூவி, அப்போதிருந்ததைப் போலவே இன்றும் பிரபலமாக உள்ளது. இது புதிய தொழில்நுட்பம், பிரீமியம் உட்புறங்கள் மற்றும் நவீன அம்சங்களுடன் ஈர்க்கிறது. டாடா சியெராவின் அடிப்படை மாடலின் விலை ரூ. 11.49 லட்சம். டாப் மாடலின் விலை ரூ. 18.49 லட்சம். நாட்டின் வெவ்வேறு நகரங்கள் மற்றும் ஷோரூம்களைப் பொறுத்து […]

சத்தீஸ்கரின் பலோடாபஜார்-பட்டாபாரா பகுதியில் உள்ள ஒரு எஃகு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது, மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளதுடன், மாநிலத்தில் உள்ள தொழில்துறை பாதுகாப்புத் தரங்கள் குறித்து புதிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவம் பலோடா பஜார் புறநகரில் உள்ள ஒரு செயல்பட்டுக்கொண்டிருந்த ஆலையில் நிகழ்ந்துள்ளது. வெடிவிபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு வழக்கமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பகுலாஹியில் […]

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு திவாலாகும் நிலையில் உள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக சதி செய்வதிலிருந்து இன்னும் பின்வாங்கவில்லை. பாகிஸ்தான் மக்களை வறுமையிலிருந்து மீட்கத் தவறிய திறமையற்ற ஷெபாஸ் அரசாங்கம், கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இத்தகைய பரிதாபகரமான நிதி நிலையில் இருந்தபோதிலும், ஆசிம் முனீர் பயங்கரவாதிகளின் ஒரு படையை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. ‘காதக்’ (கொலையாளி) என்று அழைக்கப்படும் ஒரு பிரிவு ஜம்மு ராஜௌரி எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது, […]

உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத்தில் 27 வயது முஸ்லிம் இளைஞரும் அவரது 22 வயது இந்து காதலியும், பெண்ணின் சகோதரர்களால் கட்டிப்போடப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்த ஆணவக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அர்மான், கடந்த சில மாதங்களாக மொராதாபாத்தில் வசித்து வந்தார். அப்போஒது அவர் காஜலை சந்தித்து பேச தொடங்கி உள்ளார்.. ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இந்த வெவ்வேறு […]

இந்த குளிர்காலத்தில் ​​ஆவி பறக்கும் ஒரு கப் டீ குடிப்பது ஒரு தனி சுகம் தான். அந்த கதகதப்பு உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் அமைதியைத் தருகிறது. அதனால்தான் குளிர்காலத்தில் பலர் ஒரு நாளைக்கு கணக்கற்ற கோப்பைகள் தேநீர் குடிப்பதற்கு அடிமையாகிவிடுகிறார்கள். ஆனால் தேநீரின் மீதான இந்த அன்பு உடல் நலத்திற்கு நல்லதா? அல்லது தீங்கு விளைவிக்குமா? இப்போது தெரிந்துகொள்வோம். மிதமான அளவில் தேநீர் அருந்துவது உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. அந்த வகையில் சமீபத்தில் தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு […]

இந்தியாவின் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் லட்சக்கணக்கான குடிமக்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. முதுமைக் கால வருமானப் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, அடல் ஓய்வூதியத் திட்டத்தை (APY) 2030-31 நிதியாண்டு வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு, முறையான ஓய்வூதியப் பலன்களைப் பெற முடியாத மற்றும் ஓய்வுக்குப் பிறகு நிதி நிலைத்தன்மைக்காக அரசாங்க ஆதரவு பெற்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் […]

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-வது நாள் இன்று நடைபெற்று வருகிறது.. தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது.. விவசாயிகள் தொடர்பான முக்கிய பிரச்சனையை சட்டமன்றத்தில் பேச அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.. எனினும் எடப்பாடி பழனிசாமி பேச சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.. எனவே தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் “ இபிஎஸ் […]

இன்று திருப்பூரில் கொங்கு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடக்க விழா நடைபெற உள்ளது.. இந்த  நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கவிஞர் வைரமுத்து திருப்பூர் சென்றார்.. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த கவிஞர் வைரமுத்துவுக்கு வழக்கறிஞர்கள் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது.. அப்போது திடீரென பெண் ஒருவர் வைரமுத்து மீது காலணிகளை வீசியதால் பரபரப்பு நிலவியது.. எனினும் அந்த காலணி வைரமுத்து மீது படாமல் கூட்டத்தை  தாண்டி […]

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றார்.. அவருடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பலர் சென்றனர்.. அங்கு கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.. மேலும் பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி காலை விருந்தளித்தார்.. இதை தொடர்ந்து பியூஷ் கோயல் – எடப்பாடி […]