fbpx

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகிய யாருமே அதிமுகவை வழிநடத்த தகுதியானவர்கள் இல்லை என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அதிமுகவில் இருந்த மூத்த நிர்வாகிகள் தனித்தனியாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி அணியும், 10.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம், 11 மணிக்கு டிடிவி தினகரன், 11.30 மணிக்கு சசிகலாவும் தனித்தனியாக மரியாதை செலுத்தினர். இதற்கிடையே, […]

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி 89 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் அகமதாபாத் உள்பட 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்துக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அகமதாபாத்தில் இன்று வாக்களித்தனர். […]

டிசம்பர் 8ஆம் தேதி 13 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ”வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று தென் மேற்கு வங்கக்கடல் நோக்கி நகரும். டிச.8ம் […]

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “தமிழ்நாடு தேசிய ஆசிரியர்‌ நல நிதியில் இருந்து தொழிற்கல்வி பயிலும்‌ ஆசிரியர்களின்‌ பிள்ளைகளுக்கு 2022 – 2023ஆம்‌ கல்வி ஆண்டிற்கு படிப்புதவித்‌ தொகை வழங்க விண்ணப்பங்கள்‌ பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. […]

நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை மிக அவசியமானது. தற்போது பெரும்பாலான வேலைகளுக்கும், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால், இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல. வங்கிக் கணக்கு, சிம் கார்டு, பான் கார்டு போன்ற பல்வேறு விஷயங்களில், ஆதார் கார்டை இணைப்பது அவசியமாகும். அப்படிப்பட்ட ஆதார் கார்டை நீங்கள் மிகவும் பாதுகாப்பாகவும் அப்டேட்டாகவும் வைத்திருக்க வேண்டும். பல நேரங்களில் ஆதாரில் விவரங்களை […]

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குர்லா பகுதியில் 42 வயது பெண் வசித்து வருகிறார். இந்த பெண் வீட்டில் தனியாக இருந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி அதிகாலை அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் திடீரென அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் […]

மூத்த பாலிவுட் தயாரிப்பாளர் நிதின் மன்மோகன் கடுமையான மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போல் ராதா போல் மற்றும் லாட்லா போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர் நிதின் மன்மோகன். மூத்த திரைப்படத் தயாரிப்பாளரான இவருக்கு சனிக்கிழமை மாலை கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதாகவும், நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரம்மச்சாரி, கும்னாம், நயா ஜமானா போன்ற படங்களில் நடித்து மறைந்த மன்மோகனின் மகன்தான் நிதின் மன்மோகன் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடவெட்டிவலசை கிராமத்தில் வடிவேலு என்பவருக்கு ஹரிணி என்ற 16 வயது மகள் இருந்துள்ளார். இவர் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் முதல் வருடம் படித்து வந்துள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது ஹரிணியின் வழக்கமாம். இதை வீட்டினர் பலமுறை கண்டித்துள்ளனர். அவர் கேட்காமல் தொடர்ந்து அதிக நேரம் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்டது இதையடுத்து ஹரிணியின் தாய் முருகேஸ்வரி […]

தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 இல் டிசம்பர் 5ஆம் தேதி உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், இன்றும் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அதிமுக தொண்டர்கள் மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் பகுதியில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி கொள்ளை அடிக்க ஒரு வீட்டிற்குள் திருடன் புகுந்து இருக்கின்றான். இதனை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் திருடனை மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். இந்த தாக்குதலில் திருடன் காயமடைந்தான். திருடன் பிடிபட்டு பொதுமக்களிடம் அடி வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்த வீடியோவை கண்ட அப்பகுதி காவல்துறையினர் திருடனை கொடூரமான முறையில் தாக்கிய அந்தப் […]