5G அலைக்கற்றை ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி நடைபெற்றுவதாக திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”30 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றையை டிராய் என கூறப்படும் ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்தபோது, 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது என வினோத் ராய் கூறினார். ஆனால், இன்று 51 ஜிகா ஹெட்ஸ் கொண்ட 5ஜி அலைக்கற்றை குறைவான தொகைக்கு விற்கப்பட்டு மிகப்பெரிய […]

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வந்த சூழ்நிலையில் அங்கு நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மதுரை மாவட்டத்தில் உள்ள […]

திமுக மீது புகார் தெரிவிப்பவர்கள் முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ”எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது, நிர்வாகத்தில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4,800 கோடி ஊழல் நடைபெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடர்ந்தோம். அரசு பொறுப்பில் உள்ளவர்கள் அவருடைய உறவினர்களுக்கு வழங்கக் கூடாது […]

ஆந்திராவில் அனகாபல்லி மாவட்டத்தில் நேற்று இரவு விஷ வாயு தாக்கியதால் 121 பெண்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பிராண்டிக்ஸ் செஸ்சில் இருக்கும் விதை நிறுவனத்தை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நிறுவனம் மூடப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பெறும் அனகாப்பள்ளி, என்டிஆர் பகுதி மருத்துவமனைக்கு தொழில்துறை அமைச்சர் குடிவாடா […]

‘தமிழ் மக்கள் போல் தமிழ் பேச வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்’ என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஜெயராமபுரத்தில் கொங்கு சமூக ஆன்மீக கல்வி கலாச்சாரம் மற்றும் தீரன் சின்னமலை கூட்டமைப்பு சார்பில் தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”இந்த விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தீரன் சின்னமலை சிறந்த சுதந்திரப் போராட்ட […]

ராசிபுரத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும் என ராமதாஸ், […]

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கர்நாடகாவில் மழையின் அளவு வருகிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணை நிறைந்து உபரி நீர் தற்பொழுது ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை ஏற்கெனவே அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டதால், […]

தமிழ்நாட்டில் யாருக்கும் தனித்துப் போட்டியிட தைரியம் இல்லை என்றும், ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு உள்ளது என்றும் சீமான் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”பெரிய மக்கள் படையை உருவாக்கி வெள்ளையர்களை எதிர்த்தவர் தீரன் சின்னமலை. இன்றைய […]

வேலூரில் தந்தையே தனது 13 வயது பெண் குழந்தையை கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மேலும் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாநகராட்சி விருபாட்சிபுரம் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி சங்கர் (45). இவருடைய மனைவி இவரை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சென்று விட்டதால், தனது 15 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது அவரது […]

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக அதிக கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது… சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழகத்தின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தேனி, திண்டுக்கல்‌ மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ மிக கனமழையும்‌, […]