fbpx

திரைப்படலாசிரியர் சினேகன் மீது தேசிய மகளிர் ஆணையம் மற்றும் காவல் ஆணையரகத்தில் திரைப்பட நடிகை ஜெயலட்சுமி புகார் அளித்துள்ளார். திரைப்படலாசிரியர் சினேகன் கடந்த 5ஆம் தேதி, தனது சினேகம் தொண்டு நிறுவனப் பெயரை தவறாக பயன்படுத்தியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி மீது புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இன்று சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சினேகன் மீது ஜெயலட்சுமி புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலட்சுமி, […]

காமன்வெல்த் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கடந்த 28ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றுடன் இப்போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில், 72 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். இந்நிலையில், இறுதிநாளான இன்று ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் […]

உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டு வந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டு, இனி டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இப்பணி நியமனத்தை மேற்கொள்ளும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”தற்போதைய காலத்தேவை, சமூக ஊடகத்தின் வீச்சு, நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மக்கள் தொடர்பு மற்றும் களவிளம்பரங்கள் செய்யப்பட வேண்டியதன் அவசியம் ஆகியவற்றின் அடிப்படையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) நேரடி நியமனத்திற்கான அடிப்படைத் தகுதிகளை நிர்ணயம் […]

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான புதிய நடைமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”38 மாவட்டங்களைச் சேர்ந்த 386 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்றும் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் சி.இ.ஓ. தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.. பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது.. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் […]

”பீகாரில் வீசும் காற்று வெகு விரைவில் புதுச்சேரியிலும் வீசும், ரங்கசாமி வீட்டுக்கு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மத்திய அரசு 5ஜி அலைக்கற்றை ஏலத்தினால் ரூ.4.50 லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பீடு செய்தது. ஆனால், ரூ.1.50 லட்சம் கோடிக்குத்தான் ஏலம்போயுள்ளது. ரூ.3 லட்சம் கோடி அரசுக்கு வரவேண்டிய வருவாய் […]

நாட்டில் 21 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், 7 கோடிக்கும் அதிகமான நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ஆகஸ்ட் 3, 2022 நிலவரப்படி, மொத்த வாகனங்களில் 5,44,643 மின்சார இரு சக்கர வாகனங்கள், 54,252 மின்சார நான்கு சக்கர […]

காமன்வெல்த் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 72 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இன்றுடன் இந்த விளையாட்டு போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு […]

சென்னை ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தின் அருகே விளம்பரப் பலகையின் மீது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிவாரண உதவி வழங்கியுள்ளார். நேற்றைய தினம் (7.8.2022), பெருங்களத்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று, G.S.T. சாலையில் ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாகச் செல்லும்போது, சாலையின் அருகில் இருந்த விளம்பரப் பலகையில் மோதி, […]

இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வடதமிழக மாவட்டங்கள்‌, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி, விருதுநகர்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி […]