fbpx

பொங்கல் பண்டிகைக்கு வெளி மாநிலங்களில் இருந்து வேட்டி, சேலைகளை வாங்க முயற்சி நடப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் பாஜக சார்பில் தேசியக் கொடி பேரணி நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து, கைத்தறி தின விழாவையொட்டி, நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”சுதந்திர தினத்தைக் கொண்டாடும் […]

பாஜக கூட்டணியில் இருந்து விலக ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக உடனான கருத்து வேறுபாடு அதிகரித்துள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் நாளை அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. பாட்னாவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவில் இருந்து வெளியேறி ஆர்.ஜே.டியுடன் சேர்ந்து ஆட்சியில் தொடர நிதிஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தனிப்பெரும் கட்சியாக விளங்கும் […]

சுங்கவரி வசூலிப்பதற்கான புதிய ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.. தற்போது, ​​ஒரு சுங்கச்சாவடியில் இருந்து மற்றொரு சுங்கச்சாவடிக்கு உள்ள முழு தூரத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு வாகனம் முழுத் தூரத்தையும் பயணிக்காமல், வேறு இடத்தில் பயணத்தை முடித்துக் கொண்டாலும், கட்டணம் முழுமையாக செலுத்தப்பட வேண்டும். இந்நிலையில் மத்திய அரசு விரைவில் புதிய முறையைத் தொடங்க உள்ளது.. இந்த புதிய முறையின்படி, நெடுஞ்சாலையில் எத்தனை கிலோமீட்டர் வாகனத்தை ஓட்டிச் […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,167 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 41 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 19,998 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பதக்கப் பட்டியலில் எந்தெந்த நாடுகள் முன்னிலையில் உள்ளன என்பதை பார்க்கலாம். 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே பதக்க வேட்டை நடத்தி வருகிறது. அந்த அணி, 65 தங்கம், 54 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 172 பதக்கங்களை வென்று முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்தப்படியாக போட்டியை நடத்தும் இங்கிலாந்து, 56 […]

நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் நிதி சுதந்திரத்திற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வகையில், கடந்த 2019-ம் ஆண்டு பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM- Pradhan Mantri Shram Yogi Maan-dhan) என்ற திட்டம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.. இந்த திட்டத்தில் திருமணமான தம்பதிகள் மாதத்திற்கு 200 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுக்கு […]

’அதிமுகவுக்கும், தொண்டர்களுக்கும் துரோகம் செய்தவர் ஓபிஎஸ்’ என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு சென்ற அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பேருந்து நிலையம் முன்பு ஏராளமான அளவில் திரண்டிருந்த தொண்டர்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, ”முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிமுகவை பிளவுபடுத்தி வீழ்த்தி விடலாம் என கனவு காண்கிறார். அதிமுகவை வீழ்த்த […]

பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வரும் 18ஆம் தேதி வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படவுள்ளதாக அறிவித்திருந்தது. பாடத்திட்டத்தின் பெரும்பகுதி தொழில்துறையினர் பங்களிப்பு இடம்பெறும் வகையில், தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு […]

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த Electrician பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் […]

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரியாற்றில் அதிக அளவு நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு உயர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முழுக் கொள்ளளவை எட்டியது. இந்நிலையில், நேற்று மாலை […]